செங்கல்பட்டில் 2 ரவுடிகளை என்கவுன்டர் செய்த போலீசார்.. வெளியான பரபரப்பு பின்னணி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செங்கல்பட்டில் இரண்டு ரவுடிகளை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டில் 2 ரவுடிகளை என்கவுன்டர் செய்த போலீசார்.. வெளியான பரபரப்பு பின்னணி..!

செங்கல்பட்டு கே.கே தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற அப்பு (வயது 30). இவர் நேற்று மாலை செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், திடீரென நாட்டு வெடிகுண்டை வீசி கார்த்திக்கை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Chengalpattu double murder case police encounter two rowdies

இதனை அடுத்து செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 22) என்பவரது வீட்டுக்கு இந்த மர்ம கும்பல் சென்றுள்ளது. இவரது வீடு செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அப்போது மகேஷ் தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். திடீரென உள்ளே நுழைந்த மர்ம கும்பல், மகேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடந்த சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Chengalpattu double murder case police encounter two rowdies

இதனைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழ்நிலையில் வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் இன்று (07.01.2022) காலை செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே தினேஷ், மொய்தீன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Chengalpattu double murder case police encounter two rowdies

இதனை அடுத்து உத்திரமேரூர் பகுதியில் கைதானவர்களை அழைத்து வந்தபோது, இருவரும் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதாகவும், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் தினேஷ் மொய்தீன் ஆகிய இருவரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் குண்டு தாக்குதலில் காயமடைந்த 2 போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

POLICE, TAMILNADUPOLICE, CHENGALPATTU, ENCOUNTER

மற்ற செய்திகள்