கள்ளக்காதல் விவகாரம்??.. இரண்டு குழந்தைகளின் தாய் கொலை.. விசாரணையில் மிரண்டு போன போலீஸ்
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு : கேளம்பாக்கத்தை சேர்ந்த பெண்ணின் கொலைக்கு, அவரது கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பகுதியில் காமராஜர் தெருவில் வசித்து வருபவர் சயின்ஷா. 26 வயதாகும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
முன்னதாக, இவரின் முதல் திருமணத்திற்கு பிறகு, தனது கணவருடன் கண்ணகி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது, அவருக்கு பல்வேறு ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தனக்கு முதல் குழந்தை பிறந்த சில வருடங்களிலேயே, அவரது கணவர் இறந்து விட்டார்.
இதென்னப்பா புது ட்விஸ்டா இருக்கு.. கோலி-ரோஹித் இடையே இப்படி ஒரு பிரச்சினை இருந்துச்சா?
தாயுடன் வசித்த சயின்ஷா
இதனைத் தொடர்ந்து, சயின்ஷா இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. முதல் கணவரைப் போலவே, சயின்ஷாவின் இரண்டாவது கணவரும் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்து போனதாக கூறப்படுகிறது.
இளைஞருடன் பழக்கம்
இந்நிலையில், தனது இரண்டு மகன்களுடன் அம்மாவின் வீட்டில் இருந்து வந்த சயின்ஷா, பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மறுபக்கம், தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை, சயின்ஷாவின் தாயார் தான் வேலைக்கு சென்று கவனித்து வந்துள்ளார். வழக்கம் போல வேலைக்கு சென்ற சயின்ஷாவின் அம்மா, நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
அலறித் துடித்த தாய்
அப்போது, தனது மகள் துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து, அதிர்ச்சியில் அலறித் துடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து, 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஊழியர்கள், சயின்ஷா ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மொபைல் போன் ஸ்விட்ச் ஆப்
மேலும், போலீசாரும் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். இதில், சயின்ஷா துப்பட்டா மூலம் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானதாக கூறப்படுகிறது. பின்னர், நேற்று சயின்ஷா வீட்டிற்கு, கார்த்திக் சென்றிருப்பதும் தெரிய வந்தது. ஆனால், சயின்ஷா மரணத்திற்கு பின்னர், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிகரிக்கும் சந்தேகம்
இதனால், கார்த்திக் மீது சந்தேகம் அதிகரித்துள்ளதால், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சயின்ஷாவின் குடும்பத்தாரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்