"சிறந்த பெண் கோமாளி".. குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை.. செஃப் வெங்கடேஷ் பட்டின் எமோஷனல் கமெண்ட்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி. இதன் சிறப்பம்சமாக இருப்பதே சீரியஸான விஷயமாக இருக்கும் சமையலை மிகவும் வித்தியாசமாக பொழுதுபோக்கு மற்றும் விறுவிறுப்பு அம்சங்களுடன் காண்பிப்பது தான்.
Image Credit : vijay television
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது.
இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, 4 ஆவது குக் வித் கோமாளி சீசனும் தற்போது ஆரம்பமாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Image Credit : vijay television
குக் வித் கோமாளி 4 ஆவது சீசனில் மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் உள்ளிட்ட 10 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர். போட்டியாளர்களை போல இதில் வரும் கோமாளிகளுக்கும் மக்கள் மத்தியில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மூன்று சீசன்களில் குக் வித் கோமாளி தொடரில் சிறந்த கோமாளியாக வலம் வந்த மணிமேகலை, தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தான் பகிர்ந்த பதிவில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள் என்றும், அதற்கு நான் நன்றியுள்ளவராக இருப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்த மணிமேகலை, கிடைத்த எல்லா வாய்ப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன், குக் வித் கோமாளியில் அனைவரையும் கொஞ்சம் மகிழ்வித்திருப்பேன் என நம்புவதாகவும் இனிமேலும் அனைவர் அன்பை எதிர்பார்ப்பதாகவும் உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
Image Credit : vijay television
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி பலரையும் தன் பக்கம் கவனம் ஈர்க்க வைத்தவர் மணிமேகலை. அவரது முடிவு தற்போது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அப்படி இருக்கையில், மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விலகியுள்ளது தொடர்பாக போட்ட பதிவில், அந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான செஃப் வெங்கடேஷ் பட் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
"நீங்கள் ஒரு சிறந்த பெண் கோமாளி, நான் கண்ட சிறந்த மனிதர்களில் ஒருவர். நீங்கள் பிறவி கலைஞர் மற்றும் எண்டர்டெயினர். குக் வித் கோமாளி செட்டில் உங்களுடன் சிறந்த நேரத்தை செலவழித்துள்ளேன். அதனை வாழ்நாளில் என்றென்றும் நினைப்பேன். எப்போதும் நட்சத்திரமாக ஜொலித்து உங்கள் துறையில் சிகரம் அடைய வேண்டும் என நான் இறைவனை வேண்டி கொள்கிறேன்" என குறிப்பிட்டு வாழ்த்துக்களையும் குறிப்பிட்டிருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த கமெண்டிற்கு பதில் சொன்ன மணிமேகலை, "நன்றி பட் சார். ஒரு செஃப் என்பதை தாண்டி எனக்கு நீங்கள் ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கர். எனக்கு எப்போதுமே சிறந்த விஷயத்தை வாழ்த்தும் உங்ளுக்கு நன்றி" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்