செமஸ்டர் தேர்வுகளை நடத்த கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!.. 'இவர்கள்' கட்டாயம் தேர்வு எழுத வேண்டுமாம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

செமஸ்டர் தேர்வுகளை நடத்த கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!.. 'இவர்கள்' கட்டாயம் தேர்வு எழுத வேண்டுமாம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துவந்தது.

இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்