சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குங்கள்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதன் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதனால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் சென்னையில் கொரோனா பரவல் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வருகிறது. அதனால் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசித்தவர்கள் மற்றும் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது.
நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை தடுக்கவும், உயிரிழப்பை தடுக்கவும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். வரும் குளிர்காலம் மற்றும் காற்று மாசு அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுவாசப் பிரச்சனை உள்ளவர்களை கவனமாக கண்காணிக்க வேண்டும்’ என தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
மற்ற செய்திகள்