'எங்கடா இங்க இருந்த கோயில காணோம்?'.. குழம்பிய பக்தர்கள்.. 'சிசிடிவி காட்சிகளில்' காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தாம்பரம் அருகே விநாயகர் கோயில் ஒன்று திடீரென்று காணாமல் போனதால் மக்கள் அதிர்ந்துள்ளனர்.
தாம்பரம் அருகே உள்ள மப்பேடு மும்மூர்த்தி அவன்யூ காமராஜர் தெருவில் இருந்த விநாயகர் கோயில் ஒன்றில், அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பல ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில், 3 வருடங்களுக்கு முன்பு இக்கோயிலுக்கு பின்புறம் பூச்சி மருந்துகள் தெளிக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று கட்டப்பட்டது.
அதை கட்டிய நிறுவனத்தார், இந்த கோயில் இடையூறாக இருந்ததாலும், அதனால் கோயிலை இடிக்கப் போவதாக தெரிவித்திருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் அப்பகுதி மக்கள் இந்த யோசனைக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று இயல்பாக சாமி கும்பிட பக்தர்கள் சென்றபோது, அங்கிருந்த கோயிலை காணவில்லை என்றதும் அதிர்ந்துள்ளனர்.
அம்மக்கள் இதுகுறித்து சேலையூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அங்கு விரைந்த சேலையூர் போலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான், இரவோடு இரவாக மர்ம நபர்களால் கோயில் இடிக்கப்பட்டதும், இடிக்கப்பட்ட பின், அங்கிருந்த பொருட்களை எல்லாம் அந்த நபர்கள் லாரியில் ஏற்றிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.