'அரசுப் பேருந்துகளில் கேமரா!... விவசாயக் கடன்... 2020-21 தமிழக பட்ஜெட் ஸ்பெஷல்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீசெல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதன் ஒரு பகுதியை தற்போது பார்க்கலாம்.
1. கீழடியில் அருங்காட்சிகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு
2. பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு.
3. தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
4. தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
5. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.
6. சென்னை - பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
7. உயர் கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு.
8. சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு.
9. சமூக நலன் மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.5,935 கோடி ஒதுக்கீடு.
10. வேளாண்மைத்துறைக்கு 11,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
11. கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.
12. பொதுப்பணித்துறை, நீர்பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு.
13. அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.
14. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
15. போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
16. மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
17. சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு.
18. கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
19. இந்து சமய அறநிலையத்துறைக்கு 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
20. பொதுப்பணித்துறை - கட்டட பணிகளுக்காக 1,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
21. சமூக நலன் துறைக்கு 2,535 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
22. அரசுப்பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு.
23. மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க ரூ.966 கோடி ஒதுக்கீடு.
24. காவல்துறைக்கு ரூ. 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
25. சிறைச்சாலை துறைக்கு ரூ.392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.