"எங்களுக்கு துப்பாக்கியே கிடையாது! காசி லேப்டாப்ல அவ்ளோ ஆபாசப்படங்கள்!".. அதிரவைத்த சிபிசிஐடி வட்டாரங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி என்கிற சுஜி மீதான பாலியல் வழக்கில் தினமும் ஒரு புது தகவல் வெளியாகி பரபரப்பைக் கிளப்பி வருகிறது.
சமூக வலைதளங்களில் பெண்களை காதலித்து, அவர்களை தவறாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பது பணம் கொடுக்காத பெண்களின் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டல் விடுத்து அவர்களின் கற்பை பறிப்பட்தும் என தொடர்ந்து வாடிக்கையாக வைத்திருந்த காசி, சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்த போது அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தையடுத்து காசி மற்றும் அவருடைய நண்பர் டேசன் ஜீனோ, தினேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் 5 பாலியல் மோசடி வழக்குகள் மற்றுமொரு கந்துவட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்துவரும் நிலையில் காசியின் தந்தை தங்கபாண்டியன், காசி மீதிருந்த கந்துவட்டி புகாரில் அவருக்கு உதவியாக செய்யும் செயல்பட்டு இருந்ததால் கைது செய்யப்பட்டார். காசியின் வழக்கில் முக்கியத் தடயங்களான ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டுகளில் இருந்து பல ஆவணங்களை அவருடைய தந்தை தங்கபாண்டியன் அழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் போலீசார் தங்களை மிரட்டுவதாக காசியின் தங்கை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அண்மையில் பேசிய அவர், காசி வழக்கு சம்பந்தமாக தங்களது தந்தை தங்கபாண்டியன் அதிகாரிகளுக்கு பல மனுக்கள் கொடுத்ததால், போலீசார் பிரச்சினை செய்வதாகவும் அப்பாவுக்கு சளி என்பதால் இரண்டு நாட்களாக தனிமையில் வைத்திருந்தும் சிபிசிஐடி போலீசார் அங்கு வந்து தன் தந்தையை தனிமையிலிருந்தது தெரிந்தும் தரதரவென அழைத்துச்சென்று விட்டதாகக் கூறினார். “இதனை என் அம்மா எதிர்த்து கேட்டதால் அவங்களையும் தள்ளி விட்டார்கள், அதனால் அம்மா மயக்கமடைந்தார், அவர்களாகவே கையில் ஒரு செக் கொண்டு வந்து அதை மேஜையில் வைத்துவிட்டு அப்பாகிட்ட எடுக்கச் சொன்னாங்க . அது பற்றி கேட்டதற்கு துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டி உட்கார வச்சாங்க. இதுபற்றி வெளியே சொன்னால் சாத்தான்குளம் மாதிரி காசியையும் அப்பாவையும் காலி பண்ணி விடுவோம் என்று சொன்னாங்க. எங்க உயிருக்கு பாதுகாப்பு கிடையாது. எங்களையும் எல்லோரும் மிரட்டியிருக்கிறார்கள். எங்கப்பா உயிருக்கு அரசாங்கம் உத்தரவாதம் தரணும். இல்லை என்றால் நாங்கள் தற்கொலை தான் செய்ய வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் காசியின் வீட்டுக்கு சென்றபோது விஏஓ, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்றுதான் விசாரணை நடத்தியதாகவும் காசியும் தங்கை கூறுவதில் உண்மை இல்லை என்றும் சிபிசிஐடி போலீசார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “விசாரணைக்கு முறைப்படி ஒரு டீமா காசி வீட்டுக்கு போனப்போ, அங்கு யாரும் மயங்கி விழவில்லை, சிபிசிஐடிக்கு துப்பாக்கியே கிடையாது , அப்படி இருக்கும்போது குற்றவாளிகளை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஆயுதப்படை போலீசாரை கேட்டு வாங்குவோம். ஆனால் இந்தப்பெண் அப்பா மேல் உள்ள பாசத்தால் அப்படி சொல்வதாக நினைக்கிறோம். நாங்கள் சும்மா யாரையும் கைது செய்ய மாட்டோம், காசியின் தந்தை ஏகப்பட்ட தடயங்களை அழித்திருக்கிறார். எனவே சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் எடுத்தோம். அவர்கள் வீட்டிலிருந்து எடுத்த லேப்டாப்பில் ஆபாசப் படங்களாக இருந்தன. அதை வைத்து திறந்து பார்த்தபோது, அதை பார்த்து அவர்களே ஒரு மாதிரியாகத்தான் நின்றிருந்தார்கள். எப்படியாவது போலீஸ் மீது பழி போட வேண்டும் என்று இப்படி கூறியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்