ரஜினிகாந்திற்கு 'என்ன' சிகிச்சை நடந்தது...? - 'உடல்நிலை' குறித்து 'காவேரி' மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்த படம் வெளிவரும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன் காந்த பார்வையாளும், ஸ்டைல்லான நடை உடை பாவனைகளாலும் தமிழ்நாட்டு ரசிகர்களை கவர்ந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். என்னதான் வயதானாலும் அவர் நடித்து வெளிவரும் படத்திற்காக அவரின் ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.
தற்போது சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வர இருக்கிறது. அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த சமயம் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, குணம் அடைந்து பின்னர் சென்னை திரும்பினார்.
சில நாட்கள் ஓய்வுக்கு பின் பட வேலைகள் முழுவதும் முடிக்கப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி சென்ற ரஜினிகாந்த் திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்று கொண்டு, அதன் பின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து சென்னை திரும்பினார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் ரஜினிகாந்த் அவர்கள் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பகல் 12.30 மணிக்கு மருத்துவமனைக்கு சென்ற ரஜினிகாந்த் அவர்கள் தற்போது காவேரி ஆஸ்பத்திரியின் 5-வது மாடியில் உள்ள சாதாரண அறையில் தான் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், `நடிகர் ரஜினிகாந்திற்கு கரோடிட் ஆர்டரி ரிவாஸ்குலரைசேஷன் (carotid artery revascularization) செய்ய அறிவுறுத்தப்பட்டார். இந்த செயல்முறை இன்று (29 அக்டோபர் 2021) வெற்றிகரமாக செய்யப்பட்டது. மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார்.' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை குறித்து அவரின் குடும்பத்தார் கூறும்போது, 'ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் இப்போது வந்துள்ளோம். அவர் விரைவில் வீடு திரும்புவார்' என கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்