‘கோவிலுக்கு போனபோது’... '8 பேருக்கு நிகழ்ந்த கொடூரம்'... 'சோகத்தில் ஆழ்ந்த குடும்பங்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவிலுக்கு போனபோது, லாரி மீது கார் மோதிய விபத்தில், 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து 7 பேர், ஒரு காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுகொண்டிருந்தனர். காரை பண்ருட்டியை சேர்ந்த பிராங்கிளின் (33) என்பவர் ஓட்டிச் சென்றார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் விலக்குப் பகுதியில், அவர்களது கார் வந்து கொண்டிருந்தது. அப்போது தூத்துக்குடி நோக்கி முன்னால் சென்ற லாரி மீது, திடீரென கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரியின் பின் பகுதியில் கார் சிக்கி கொண்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பிராங்கிளின், பண்ருட்டியை சேர்ந்த விஜி என்ற நந்தகுமார் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். லாரியின் பின்பகுதியில் கார் சிக்கி கொண்டதால், காரின் உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த, போலீசார், காரின் கதவுகளை உடைத்து அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் காரில் இருந்து மீட்கப்பட்டது. பின்பு இருவரின் உடல்களும், பிரேதப் பரிசோதனைக்காக, எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சாமி கும்பிட போனவர்கள், விபத்தில் சிக்கிய சம்பவம் அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.