'துணை நடிகைகளை வைத்து போட்ட பிளான்'... 'ஸ்பாக்குள் அடைத்து வைக்கப்பட்ட இளம்பெண்கள்'... கூண்டோடு சிக்கிய கும்பல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கோட்டகுப்பம் பகுதியில் உள்ள தந்திராயன் குப்பத்தில், விருந்தினர் மாளிகைகள் செயல்பட்டு வருகிறது. அதில் விழுப்புரம் மாவட்ட போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது புதுச்சேரியைச் சேர்ந்த ஏடிஎம் மோசடிக்காரரும், தொழிலதிபருமான சந்துரு ஜி என்பவருக்குச் சொந்தமான ஒரு விருந்தினர் இல்லத்தையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அங்கு ஸ்பா ஒன்று இயங்கி வந்தது. அதில் இரண்டு பெண்கள் அடைத்து வைத்திருந்ததைப் பார்த்த போலீசார் அதிர்ந்து போனார்கள். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்துவதற்காக இருவரையும் அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் சென்னையில் துணை நடிகைகளாக இருப்பதும், வளசரவாக்கத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு அழகுக்கலை மற்றும் மசாஜ் தொழில் கற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றி அழைத்து வந்தது தெரிய வந்தது.
துணை நடிகைகளை பாலியல் தொழில் ஈடுபடுத்த அந்த கும்பல் திட்டம் போட்டிருந்ததும் விசாரணையில் வெளிவந்தது. இதையடுத்து புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் சந்துரு ஜி மற்றும் அவரது நண்பர் விஜயகுமார் விருந்தினர் இல்லத்தில் காவலாளியாக பணிபுரிந்த டெல்லியைச் சேர்ந்த அனில் ஜோசப் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் அந்த இல்லத்துக்குச் சீல் வைத்தனர்.
மற்ற செய்திகள்