‘10ம் வகுப்பு’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வீடு வரை ‘பேருந்து’ வசதி.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களை அழைத்து வர பேருந்து வசதி செய்து தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து தெரிவித்தார். அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்த அறிவிப்பினைத் தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சில கருத்துக்களை கூறி உள்ளார். அதில், 31ம் தேதி வரை விமானம், ரயில் போக்குவரத்து சேவைகளை ரத்து செய்ய பிரதமரிடம் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், மாணவர்கள் எப்படி தேர்வுக்கு வர முடியும் என கேட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களையும் தேர்வு மையத்திற்கு அழைத்து வந்து திரும்ப வீட்டிற்கு கொண்டு சென்று விட பேருந்து வசதிகள் செய்யப்பட உள்ளது. மலைப் பகுதியில் உள்ள மாணவர்களையும் தேர்வு அறைக்கு அழைத்து வர பேருந்து வசதி செய்யப்பட உள்ளது. தேர்வு அறையில் மருத்துவத்துறை அறிவுரையின்படி மாணவர்களுக்கு இடையே போதிய இடைவெளி விடப்படும். அதேபோன்று தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணுந்து வர வேண்டும். நோய்தொற்று பரவும் என அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #TNGovt #PublicExam #TNEducation
— K.A Sengottaiyan (@KASengottaiyan) May 13, 2020