'வலுவிழந்த பின்பும்.. ஒரே இடத்தில் நின்று நகர மறுத்து.. ஆட்டம் காட்டும் புரெவி'... பிச்சு எடுக்கும் கனமழை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுரத்திற்கு அருகே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதுடன் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பதால், தென் தமிழகத்தை கலக்கி வருகிறது.
இதனிடையே சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே கரையை கடந்த புரெவி புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்ததை அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்திற்கு அருகே மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அங்கும் இங்கும் நகராமல் ஒரே இடத்தில் நீடித்ததால் கனமழை நீடிக்கும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுவை, காரைக்கால், கள்ளக்குறிச்சியி பகுதிகளில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புறம் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், காற்றின் வேகம் குறைந்துள்ள போதிலும் மழை விடாமல் வெளுத்துக் கட்டியிருக்கிறது.
மற்ற செய்திகள்