கன்று குட்டியை தூக்கி சென்றதால்.. 3 கி.மீ தூரம் விரட்டி சென்ற மாடு.. சென்னையில் நெகிழ்ச்சி
முகப்பு > செய்திகள் > தமிழகம்மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடு ஒன்று குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. எருமை குட்டியை பார்த்த அந்த மாட்டின் உரிமையாளர் குட்டியை வீட்டுக்கு கொண்டு சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் பைக்கில் எருமை கன்றுக் குட்டியை ஏற்றிக் கொண்டு தனது வீடு நோக்கி கிளம்பி உள்ளார்.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் மோகன். இவர் சொந்தமாக மாடுகளை வளர்த்து அவைகளிடம் இருந்து கிடைக்கும் பால் மூலம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது எருமை மாடு ஒன்று தான் மேய்ச்சலுக்கு சென்ற போது கன்றுக் குட்டியை ஈன்றுள்ளது. இதை அறிந்த தான் மாட்டின் உரிமையாளர் குட்டியை வீட்டுக்கு கொண்டு சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் பைக்கில் எருமை கன்றுக் குட்டியை ஏற்றிக் கொண்டு தனது வீடு நோக்கி கிளம்பி உள்ளார்.
ஈன்ற குட்டியை எங்கோ தூக்கிச் சொல்கிறார்கள் என நினைத்த எருமை மாடு உடனடியாக உரிமையாளரின் பைக்கை துரத்த ஆரம்பித்தது. மேய்ச்சலுக்குச் சென்ற இடத்தில் இருந்து சுமார் 3கி.மீ தூரம் எருமை மாடு பைக்கின் பின்னாளேயே வந்து கொண்டிருந்தது.
எருமை தனது கன்றுக் குட்டியை பிரிய மனம் இல்லாததால் இப்படி பைக் பின்னாடியே ஓடி வந்துள்ளது. பைக் மெதுவாக செல்லும் இடங்களில் மெதுவாகவும் வேகமாக செல்லும் இடங்களில் வேகமாகவும் பைக் பின்னாடியே அந்த எருமை ஓடி வந்துள்ளது. சாலையில் சென்றவர்கள் இந்தக் காட்சியை புகைப்படங்கள் எடுத்து ஆச்சர்யப்பட்டு இருக்கின்றனர்.
மற்ற செய்திகள்