ஜியோ, ஏர்டெல், வோடபோனுக்கு 'செம' போட்டி.. களத்தில் 'குதித்த' நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜியோ தவிர்த்து மற்ற வாய்ஸ் கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் என ஜியோ நிறுவனம் அறிவித்த நிலையில், வாய்ஸ்கால்கள் முற்றிலும் இலவசம் என ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.டெலிகாம் நிறுவனங்களின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு பிஎஸ்என்எல்(BSNL) நிறுவனம் இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக செம ஆபர்களை அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 1699-க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு பதிலாக 455 நாட்கள் தினசரி பேசலாம். நாளொன்றுக்கு 3.5 GB டேட்டா, 250 நிமிடங்கள் டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ்-கள் இலவசம் என அறிவித்துள்ளது.
— BSNL TamilNadu (@BSNL_TN) October 9, 2019
இதுதவிர லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் கனெக்ஷன் டிரையல் ஆபர் ஒன்றையும் அறிவித்துள்ளது. ஒரு மாதம் வரை இந்த டிரையல் ஆபர் இருக்கும். தினசரி 5 GB வழங்கப்படும் என்றும் தீபாவளி ஆபர்களை பிஎஸ்என்எல் அள்ளி வழங்கி வருகிறது. வருடாந்திர பிளான்களை தேர்ந்து எடுப்பவர்களுக்கு 25% கேஷ்பேக் ஆபரும் உண்டு.இது எல்லாவற்றுக்கும் கடைசி நாள் அக்டோபர் 31-ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
— BSNL TamilNadu (@BSNL_TN) October 10, 2019