VIDEO: ‘கட்டிப்பிடிச்சு கதறி அழுத அண்ணன்’.. சினிமாவை விஞ்சிய ‘அண்ணன், தங்கை பாசம்’.. உருகவைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணம் முடிந்து மறுவீடு செல்லும் தங்கையின் பிரிவை தாங்க முடியாமல் அண்ணன் கதறி அழுத வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் உருக வைத்துள்ளது.

VIDEO: ‘கட்டிப்பிடிச்சு கதறி அழுத அண்ணன்’.. சினிமாவை விஞ்சிய ‘அண்ணன், தங்கை பாசம்’.. உருகவைத்த வீடியோ..!

பாசமலர் படம் தொடங்கி சமீபத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை வரை அண்ணன், தங்கையின் பாசத்தை திரையில் பார்த்து உருகாதவர்களே இருக்க மாட்டார்கள். வெளியில் என்னதான் சண்டை போட்டுக்கொண்டாலும் ஒருவரையொருவர் எப்போது விட்டுக்கொடுப்பதில்லை. குடும்ப உறவில் அண்ணன், தங்கையின் பாசத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

அந்தவகையில் திருமணமான தங்கை மறுவீடு செல்வதை தாங்க முடியாமல் அண்ணன் கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கண்ணீர் விட்டு அழும் தனது அண்ணனைப் பார்த்து தங்கையும் கண்கலங்கி கட்டியணைத்து அவரை தேற்றுகிறார். அண்ணன், தங்கையின் பாசத்தை பார்த்து அருகில் இருந்த உறவினர்களும் கண்கலங்கினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரது அன்பையும் பெற்று வருகிறது.

BROTHER, SISTER, MARRIAGE, VIRAL