‘எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம்’.. தாலி கட்டும் நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. எல்லாத்துக்கும் ‘காரணம்’ அந்த ஒன்னே ஒன்னு தான்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாலி கட்டும் நேரத்தில் திடீரென கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நேரு நகரைச் சேர்ந்த லட்சுமி (வயது 22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே பள்ளம் என்ற கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் வைத்து காலை 6 மணியளவில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் திருமண நாளன்று மணப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் கோவிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்போது மாப்பிள்ளையும் அவரது உறவினர்கள் யாரும் அங்கு இல்லாததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை அடுத்து மணமகன் சரவணன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் மது போதையில் மயங்கிக் கிடப்பதை பார்த்து மணப்பெண்ணின் வீட்டார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.ர் இதனைப் பார்த்த மணப்பெண் லட்சுமி ‘எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்’ என்று மாலையை கழட்டி வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு செய்யப்பட்ட செலவுகளை மணமகன் வீட்டார் திரும்ப தர வேண்டும் என மணப்பெண்ணின் தாய்மாமன் பாலு மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே மதுபோதை தெளிந்ததும் மணமகன் சரவணன் ‘இனிமேல் நான் குடிக்க மாட்டேன் பெண்ணை திருமணம் செய்து கொடுங்கள்’ என காவல் நிலையத்திலேயே மணப்பெண்ணின் வீட்டாரிடம் கெஞ்சியுள்ளார். மேலும் மணப்பெண் லட்சுமியிடமும் இனிமேல் குடிக்கமாட்டேன் என கெஞ்சி பார்த்துள்ளார். ஆனால் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என மணப்பெண் லட்சுமி பிடிவாதமாக மறுத்துவிட்டார். மாப்பிள்ளை மதுபோதையில் இருந்ததைக் கண்டு, தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்