கல்யாண மாப்பிள்ளைக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்.. ஓப்பன் பண்ணிய உடன் வெடித்துச் சிரித்த மணப்பெண்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமண வரவேற்பு அன்று மணமகனுக்கு அவரது நண்பர்கள் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசை பார்த்ததும் மணமகள் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருமணம்
பொதுவாக திருமணத்தில் மணமக்களின் நண்பர்கள் கொடுக்கும் பரிசுகள் எப்போதும் மக்களின் கவனத்தை பெறும். கரண்ட் ட்ரெண்ட்-ற்கு ஏற்றவாறு வெங்காயம், பெட்ரோல் உள்ளிட்ட பரிசு பொருட்களை மணமக்களுக்கு வழங்கும் வீடியோக்களை பார்த்திருப்போம். தங்க செயின்களோடு அணிவகுக்கும் நண்பர்களை கண்டிருக்கிறோம். பைக்குகள் உள்ளிட்ட பரிசுகளை கொடுக்கும் நபர்களையும் சந்தித்திருப்போம். ஆனால், தற்போது வைரலாகி கொண்டிருக்கும் வீடியோவில் மணமகனுக்கு நண்பர்கள் கொடுக்கும் பரிசை பார்த்ததும் நமக்கே பகீர் சிரிப்பு வரத்தான் செய்கிறது.
பரிசு
இது யாருடைய கல்யாணம்? எங்கே நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. ஆனால், வீடியோவில் ஒரு கேக் வெட்டப்படுகிறது. நண்பர்கள் உற்சாகமாக சத்தம் எழுப்ப மணமக்கள் இருவரும் வெட்டும் கேக்கில் பாபி மற்றும் நிதி என எழுதப்பட்டிருக்கிறது. கேக் எல்லாம் வெட்டி கொண்டாடப்பட்ட அப்புறம் தான் திரில்லான இடம் வருகிறது. அது பரிசு வழங்கும் வைபவம்
மணமகன் - மணமகள் கைகோர்த்து நிற்க, கெத்தா சும்மா ஸ்டைலா ஒருவர் கிப்டை எடுத்து வருகிறார். அது புது மாப்பிள்ளை கையில் கொடுக்கப்படுகிறது. இதனை மணமக்கள் பிரிக்க, உள்ளே ஒரு கட்-அவுட் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
புதுமண தம்பதிகள் இருவரும் ஆளுக்கு ஒருபுறம் அதனை விடுவிக்கும்போதுதான் அல்டிமேட் அலப்பறை சம்பவம் நடந்துள்ளது. பரிசாக கொடுக்கப்பட்ட கட்- அவுட்டில் 'கிஃப்ட் கொடுக்க காசு இல்லையே" என பிரிண்ட் செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் நடிகர் வடிவேலு புகைப்படத்துடன்.
உள்ளே என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தில் கவனமாக கட்-அவுட்டை பார்த்துக் கொண்டிருந்த மணமகள், அதில் இருந்த வரிகளையும் இங்கிலீஸ்காரன் படத்தில் வரும் நடிகர் வடிவேலுவின் புகைப்படத்தையும் பார்த்ததும் வெடித்துச் சிரிக்கிறார்.
'கிஃப்ட் வாங்க காசு இல்லையே' என்பதையே கிஃப்டாக மணமகனின் நண்பர்கள் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
"என் பணத்தை கொடுத்திடுங்க"..காலில் விழுந்து கதறிய பெண்.. அசராமல் நின்ற நபர்.. உருக்கமான வீடியோ..!
மற்ற செய்திகள்