'தாலியை அப்புறமா கட்டலாம், ஒரு நிமிஷம் இருங்க'... 'திடீரென திருமணத்தை நிறுத்திய பெண்'... அம்பலமான மாப்பிள்ளை வீட்டாரின் பித்தலாட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணத்தில் சொல்லப்படும் பொய்கள் எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது இந்த சம்பவம்.
உத்தரப்பிரதேச மாநிலம் Auraiya-வில் வசித்து வருபவர் Arjun Singh. இவர் தன்னுடைய மகள் அர்ச்சனாவிற்கு, வரன் பார்த்து வந்துள்ளார். அப்போது சிவம் என்ற இளைஞருக்கும் அவரது மகளுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன் படி கடந்த 20-ஆம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகள் மற்றும் மணமகன் ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலம் சென்று திரும்பிய நிலையில் புதுமாப்பிள்ளை மீது மணமகள் குடும்பத்தாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் மணமகன் கருப்பு கண்ணாடி அணிந்த படியே இருந்துள்ளார். அதே நேரத்தில் தாலி கட்டும் நேரமும் நெருங்கியது. அப்போது மணமகள் திடீரென, திருமணத்தைச் சிறிது நேரத்திற்கு நிறுத்துங்கள் எனக் கூறி மனமேடையை விட்டு எழுந்துள்ளார்.
பின்னர் மாப்பிள்ளையிடம் நீங்கள் எனக் கண்ணாடியைக் கழற்றாமலே இருக்கிறீர்கள், அதற்கு என்ன காரணம் எனக் கேட்டுள்ளார். ஆனால் புது மாப்பிள்ளை எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் பொறுமையிழந்த மணப்பெண், ஒரு செய்தித்தாளைக் கொண்டு வரச் சொல்லி, கண்ணாடி இல்லாமல் படிக்கும் படி கூறியுள்ளார். அப்போது அவர் வாசிக்கத் தவறியதால், மணப்பெண் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது தான் புது மாப்பிள்ளைக்குக் கண்ணில் இருக்கும் பிரச்சனை குறித்து அவர்களுக்குத் தெரிய வந்தது. உடனே திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணின் வீட்டார், தங்களிடம் உண்மையைக் கூறாமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் கொடுக்கப்பட்ட வரதட்சணை அனைத்தையும் திருப்பித் தரும்படியும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், சிவாமின் குடும்பத்தினர் தற்போது வரை அதை இன்னும் திருப்பித் தராத காரணத்தினால், அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணத்தில் சொல்லப்படும் ஒரு பொய் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது இந்த சம்பவம்.
மற்ற செய்திகள்