மேடையில் தள்ளாடிய மாப்பிள்ளை.. மணப்பெண் எடுத்த முடிவு.. சோகத்தில் முடிந்த கல்யாணம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாம்பாக்கம் அருகே திருமண வரவேற்பின் போது மணமகன் தள்ளாடிய நிலையில் மயங்கி விழவே மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேடையில் தள்ளாடிய மாப்பிள்ளை.. மணப்பெண் எடுத்த முடிவு.. சோகத்தில் முடிந்த கல்யாணம்..!

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | காதலர்கள் மத்தியில் வைரலாகும் "காதல் தீவு".. வாங்குவதற்கு போட்டிபோடும் கோடீஸ்வரர்கள்.. எங்கப்பா இருக்கு?.. சுவாரஸ்ய தகவல்கள்..!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் மேலக்கோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் இருதரப்பிலும் தடபுடலாக நடைபெற்று வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து திங்கட்கிழமை இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக மாம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு விழா நடைபெற்றிருக்கிறது. அப்போது மணமகன் தள்ளாடிய நிலையில் இருந்ததாக தெரிகிறது. திருமண வரவேற்பில் இருதரப்பிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்த நிலையில் மணமகன் மேடையிலேயே மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் இதுகுறித்து மாப்பிள்ளையிடம் கேள்வி எழுப்ப, வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

Bride call off marriage after groom continuously fainted at reception

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து, வாக்குவாதம் கைமீறுவதை அறிந்த சிலர் தாழம்பூர் காவல்நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து மண்டபத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மணமகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மணமகன் மது அருந்தவில்லை எனவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் வேறு ஏதேனும் போதை பொருட்களை அவர் உட்கொண்டிருக்கலாம் என சந்தேகித்த மணமகள் வீட்டினர் திருமணத்தை கைவிடுவதாக தெரிவித்திருக்கின்றனர்.

Bride call off marriage after groom continuously fainted at reception

Images are subject to © copyright to their respective owners.

பின்னர், தாங்கள் அளித்த மோதிரம், தங்க செயின் உள்ளிட்டவற்றை கொடுக்கும்படியும் செலவுகளை மணமகன் வீட்டினரே ஏற்க வேண்டும் எனவும் மணமகள் வீட்டினர் தெரிவித்திருக்கின்றனர். காவல்துறையினர் முன்னிலையில் மாப்பிள்ளை தனக்கு வழங்கப்பட்ட நகைகளை திரும்ப கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் அவரை பத்திரமாக வெளியே அழைத்துச் சென்ற போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | தென்காசி பெண் கிருத்திகா கொடுத்த வாக்குமூலம்.. நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு உத்தரவு..!

BRIDE, MARRIAGE, GROOM, RECEPTION

மற்ற செய்திகள்