'வெல்டன் பாய்ஸ்...' 'பத்தாம் வகுப்பில் பெண்களுக்கு நிகராக ஆண்கள் தேர்ச்சி...' வரலாறு படைச்சுட்டோம்னு பசங்கலாம் செம ஹேப்பி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி ஒரு வரலாற்று நிகழ்வே நடந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அது என்னவென்றால் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் ஒரே அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எப்பொழுதுமே எந்த ஒரு பொதுத்தேர்வு என்றாலும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதத்தை பெறுவர். இது ஒரு எழுதப்படாத வரலாற்று ஆவணமாகவே இருந்து வந்த சூழலில், கொரோனா அதற்கு ஒரு முட்டுக்கட்டையை போட்டுள்ளது. தமிழக முதல்வரின் இன்றைய அறிவிப்பின் படி 10-ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவித்துள்ளது. மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகை அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட்டு மாணவர், மாணவிகள் தேர்ச்சி அளிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.2 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 93.3 சதவீதத்தையும் மாகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97 சதவீதத்தையும் பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றிருப்பதால் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.
மற்ற செய்திகள்