'சும்மா ஒண்ணும் சீன பொருட்களைப் புறக்கணிக்க முடியாது'... 'இந்த பாதிப்பு உங்களுக்கு தெரியுமா?'... எச்சரித்த சீன பத்திரிகை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சீன பொருட்கள் புறக்கணிப்பு நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சீன பத்திரிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

'சும்மா ஒண்ணும் சீன பொருட்களைப் புறக்கணிக்க முடியாது'... 'இந்த பாதிப்பு உங்களுக்கு தெரியுமா?'... எச்சரித்த சீன பத்திரிகை!

லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்களிடம் எழுந்த கொந்தளிப்பையடுத்து சமூக வலைத்தளங்கள் உட்படப் பல இடங்களில் சீன பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது. சில இடங்களில் சீன பொருட்களைப் போட்டு உடைக்கும் வீடியோகளும் இணையத்தில் வைரலானது.

இதனிடையே சீன பொருட்களைப் புறக்கணிப்பதால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் என அந்த நாட்டு அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகையில் ‘சீன தயாரிப்புகள், செல்போன் செயலிகளை இந்தியா புறக்கணித்தால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும்’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டு உள்ளது. இந்தியாவில் சீன பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் அந்த நாட்டுப் பொருட்கள் வர்த்தகத்தில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக இரு நாட்டின் உறவுகளும் பாதிக்கும் என எச்சரித்துள்ளது. எனினும் சீன பொருட்களின் விலை உள்ளிட்ட வாடிக்கையாளர் நலன் சார்ந்த அம்சங்களால் இந்த போராட்டங்கள் முடிவுக்கு வரும் என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்