"ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!".. 108 கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்!.. பிறகு தெரியவந்த உண்மை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து, அது புரளி என தெரியவந்துள்ளது.
!["ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!".. 108 கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்!.. பிறகு தெரியவந்த உண்மை! "ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!".. 108 கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்!.. பிறகு தெரியவந்த உண்மை!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/bomb-threatened-to-rajinikanth-house-police-found-its-a-hoax-thum.jpg)
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக 108 கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொலைபேசி மூலம் மர்ம நபர் விடுத்த இந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்ற போலீஸார் அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் தேனாம்பேட்டை போலீசார் மிரட்டல் விடுத்த நபர் யாரென தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்