'சென்னையில்' 3 முக்கிய இடங்களுக்கு 'வெடிகுண்டு' மிரட்டல்... 'காவல்கட்டுப்பாட்டு' அறைக்கு மர்மநபர் 'மிரட்டல்'... 'போலீசார்' தீவிர 'சோதனை'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதயடுத்து இந்த மூன்று இடங்களிலும் போலீஸ் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
CHENNAI, BOMB THREAT, MAJOR DESTINATION, RAILWAY STATION, AIRPORT, KOYAMBEDU