"ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'!.. 'அதிர்ந்த' போலீஸார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக, நேற்றைய தினம் சென்னை 108 காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் போன் அழைப்புவந்தது.

"ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'!.. 'அதிர்ந்த' போலீஸார்!

இதனை அடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த்தின் வீட்டில் போலீஸார், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுடன் சென்று சோதனை செய்த பின்னர்தான், அங்கு வெடிகுண்டு இல்லை என்பது, வந்தது பொய் மிரட்டல் என்றும் யாரோ புரளியைக் கிளப்பியிருப்பதாகவும் கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்த நபர் யார் என்று போலீஸார் தேடியதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் 15 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் பிடிபட்டார். சிறுவன் விளையாட்டாக போன் செய்துவிட்டார் என்பதாலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டார் என்றும் தெரியவந்ததை அடுத்து, சிறுவனின் பெற்றோரிடம் போலீஸார் எழுதி வாங்கிக் கொண்டனர்.

மற்ற செய்திகள்