VIDEO: 'கொங்கு நாடு' சர்ச்சை முடிவுக்கு வந்தது!.. பின்னணியை விளக்கி... உண்மையை உடைத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபோது, அவருடைய சுயவிவரக் குறிப்பில் கொங்குநாடு எனக் குறிப்பிட்டிருந்த சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

VIDEO: 'கொங்கு நாடு' சர்ச்சை முடிவுக்கு வந்தது!.. பின்னணியை விளக்கி... உண்மையை உடைத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

தமிழக மாநில பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபோது அவருடைய சுய விவரத்தில் 'கொங்கு நாடு' என இடம்பெற்றிருந்தது. இது சமூக ஊடகங்களில் மிகப்பெரிய விவாதப்பொருளானது. இதுதொடர்பாக பல்வேறு கண்டனங்களும், எதிர்வினைகளும் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. எனினும், பாஜக தலைமை தரப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டலமான கொங்கு பகுதியை ஒருங்கிணைத்து கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க தருமபுரியில் பாஜக கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த செயல் கொங்குநாடு விவாதத்தில் மேலும் விவாதத்தை சூடுபிடிக்க வைத்தது.

இந்நிலையில், தமிழக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை இன்று சென்னை கமலாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு, அண்ணாமலை, எல்.முருகன், சி.டி ரவி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருடைய சுய விவரத்தில் 'கொங்குநாடு' என இடம்பெற்றிருந்தது குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது.

இதுகுறித்து அண்ணாமலை பதிலளித்தபோது, "தற்போது ட்விட்டரில் அனைவருமே தங்களுடைய அடையாளமாக பாண்டிய நாடு, சோழ நாடு, கொங்குநாடு என போட்டுக்கொள்கின்றனர். அதுபோல முருகனும் தமிழ்நாட்டிலிருந்து மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட ஒருவர்" என்று கூறினார். அப்போது இடைமறித்த எல்.முருகன், "இது விவாதத்திற்குரிய விஷயமே அல்ல; அது ஒரு தட்டச்சுப் பிழையே" என்று கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தொடர்ந்து, தருமபுரி பாஜக மாவட்ட கூட்டத்தில் கொங்குநாட்டை புதிய மாநிலமாக உருவாக்கவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "ஒரு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதில் எங்களுடைய சில தலைவர்களும் கலந்துகொண்டனர். உடனடியாக அந்த மாவட்ட தலைவரை தொடர்புகொண்டு கட்சியின் நிலைப்பாடு அது இல்லை என்றபோது, எதற்காக இதுபோன்ற தீர்மானம் எடுத்தீர்கள் என்பது குறித்த விளக்கம் கேட்டிருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாடு அதுவல்ல என்பதை தெளிவுப்படுத்துகிறோம்" என்று கூறினார்.

இதன் மூலம், 'கொங்கு நாடு' சர்ச்சைக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்