கண்டெய்னர் லாரி மீது மோதிய ‘குஷ்பு’ சென்ற கார்.. வேல்யாத்திரைக்கு செல்லும் போது நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டெய்னர் லாரி மீது மோதிய ‘குஷ்பு’ சென்ற கார்.. வேல்யாத்திரைக்கு செல்லும் போது நடந்த அதிர்ச்சி..!

திரைப்பட நடிகையும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு தனது காரில் செங்கல்பட்டு அடுத்த மேல்மருவத்தூர் அருகே சென்றுகொண்டு இருந்தார். அப்போது முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் திடீரென மோதியுள்ளது. இந்த விபத்தில் காரின் பின்பக்க கதவு சேதமடைந்துள்ளது.

BJP Kushboo car met with an accident near Melmaruvathur

இந்த விபத்தில் குஷ்புக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த குஷ்பு, ‘கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் கார் மட்டுமே சேதம் அடைந்துள்ளது. யாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. கடலூர் நோக்கி வேல் யாத்திரைக்கு சென்றுகொண்டு இருக்கிறேன். கடவுள் முருகன் என்னைக் காப்பாற்றி விட்டார்’ என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்