"தமிழ் டிவி நிகழ்ச்சியில பிரதமரை கேலி செஞ்சுட்டாங்க!".. அடுத்து செய்யப்போவது என்ன? அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரதமர் மோடி குறித்து நகைச்சுவை என்ற பெயரில் சிறுவர்களை வைத்து அவதூறு பரப்பியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் பாட்டு நடனம் காமெடி என பெரியவர் முதல் சிறியவர் வரை பலர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகள் காமெடி ஷோ ஒன்று ஒளிபரப்பானது.
அதில், புலிகேசி மன்னர் போன்ற வேடத்தில் ஒரு குழந்தையும், மங்குனி அமைச்சர் வேடத்தில் ஒரு குழந்தையும் நடித்திருந்தனர். கருப்பு பணம் ஒழிப்பு, பணமதிப்பிழப்பு, பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்டவை குறித்து மறைமுகமாக ஏராளமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த குழந்தைகள் பேசி நடித்த காட்சிகள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் பேசும் கருத்துக்கள் பலரையும் கவர்ந்து வரும் நிலையில், இணையத்தில் இந்த வீடியோ காட்சியை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில், குழந்தைகள் இதுபோன்ற விமர்சனங்களை முன் வைக்க வாய்ப்பில்லை. இது பாஜக எதிர்ப்பு மனநிலை, குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக அந்த சேனல் வைத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேலும், அந்த நிகழ்ச்சி குறித்து மத்திய இணை அமைச்சர் திரு முருகன் அவர்கள் தன்னிடம் தொடர்புகொண்டு பிரதமர் குறித்து காட்சிகள் வைத்திருப்பதை பற்றி கேட்டறிந்தார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆதரவு
இது பிரதமர் மோடியையும், அமைச்சர் அமித்ஷாவையும் குறிப்பிடுவது போல உள்ளது என பா.ஜ.கவினர் புகார் தெரிவித்து இருந்தனர்.
ஒரு காமெடி ஷோவில் குழந்தைகள் பேசுவதை நகைச்சுவையாக கூட எடுத்துக்கொள்ள முடியாத பாஜகவினர்,இதில் அர்த்தம் கற்பிக்க முயற்சிக்கின்றனர். காமெடி நிகழ்ச்சியை காமொடியாகத்தான் பார்க்க வேண்டும். குழந்தைகளிடம் வெறுப்பை விதைக்காதீர்கள். இதில் கொந்தளிக்கும் அளவிற்கு பெரிய தவறாக பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறதது என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை ட்வீட்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்கள் தன்னை தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மாண்பை குறைப்பது போல சில காட்சிகள் வைத்திருப்பதை பற்றி தன்னிடம் கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்' என பதிவிட்டுள்ளார்.
குழந்தைகள் ஷோ ஒளிபரப்பான தொலைக்காட்சி மீது அண்ணாமலை ஏற்கனவே கடும் வாதங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்