தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியா பாஜக? - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
மகனின் சிகிச்சைக்கு உதவி கேட்ட பெற்றோர்.. கே.எல்.ராகுல் செய்த நெகிழ்ச்சி காரியம்.. என்ன மனுஷன்யா..
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் திமுக அபார வெற்றி பெற்றிருந்தது.
பாஜக நிலை
நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அறிவித்தது. இந்நிலையில், தனியாக போட்டியிட்ட பாஜக சில இடங்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் பாஜகவின் உமா ஆனந்த் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகி இருக்கிறார். எதிர்பார்த்ததை போலவே கன்யாகுமரி மாவட்டத்தில் பாஜக குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்றுள்ளது.
3வது பெரிய கட்சி
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,“பா.ஜ.க.வின் வலிமையை உணர்த்துவதற்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். அ.தி.மு.க.வுடனான தேசிய கூட்டணி தொடரும்; பா.ஜ.க. வலிமைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தேர்தலில் அ.தி.மு.க. பின் தங்கிவிட்டதால் குறைத்து மதிப்பிடக் கூடாது. பா.ஜ.க.வை முழுமையாக ஏற்று எங்களுடன் பயணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். கடின உழைப்பால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு பா.ஜ.க. வந்துள்ளது” என்றார்.
ஸ்டாலின் பதிலடி
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பதில் தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்," நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில் அந்தந்த பாஜக வேட்பாளர்களுக்காக கிடைத்த வெற்றி இது. மொத்தமாக பார்த்தால் தமிழக மக்கள் பாஜகவை புறக்கணித்துள்ளனர்" என்றார்.
தனித்து போட்டியிடட்டும்..
இந்நிலையில், அண்ணாமலையின் கூற்றுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி,"தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சி காங்கிரஸ்தான், பாஜக அல்ல. 2024 மக்களவை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிக்கட்டும். பாஜக தனித்து போட்டியிடுமா? என்பதை அண்ணாமலை தெளிவாகக் கூற வேண்டும்" என்றார்.
கள நிலவரம் என்ன?
தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பாஜக என அண்ணாமலை கூறியதை அடுத்து பல்வேறு எதிர் கருத்துகள் கிளம்பியுள்ளன. சரி, தேர்தல் முடிவு என்னதான் சொல்கிறது? தமிழகத்தின் மூன்றாவது கட்சி பாஜக தானா? பார்த்துவிடலாம்.
மாநகராட்சி (மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1374)
தேர்தல் ஆணையம் அளித்துள்ள தகவலின் அடிப்படையில் மாநகராட்சி உறுப்பினர்களை அதிகளவில் பெற்றிருக்கும் முதல் 4 கட்சிகளின் பட்டியல் (சதவீதத்தில்) கீழே வருமாறு :
திமுக - 69.07%
அதிமுக - 11.94%
காங்கிரஸ் - 5.31%
பாஜக -1.60%
நகராட்சி (மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 3843)
தேர்தல் ஆணையம் அளித்துள்ள தகவலின் அடிப்படையில் நகராட்சி உறுப்பினர்களை அதிகளவில் பெற்றிருக்கும் முதல் 4 கட்சிகளின் பட்டியல் (சதவீதத்தில்) கீழே வருமாறு :
திமுக - 61.41%
அதிமுக - 16.60%
காங்கிரஸ் - 3.93%
பாஜக -1.46%
பேரூராட்சி (மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 7621)
தேர்தல் ஆணையம் அளித்துள்ள தகவலின் அடிப்படையில் பேரூராட்சி உறுப்பினர்களை அதிகளவில் பெற்றிருக்கும் முதல் 4 கட்சிகளின் பட்டியல் (சதவீதத்தில்) கீழே வருமாறு :
திமுக - 57.58%
அதிமுக - 15.82%
காங்கிரஸ் - 4.83%
பாஜக - 3.02%
ஒட்டு மொத்தமாக ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெற்ற வார்டுகளின் எண்ணிக்கை
திமுக - 7700
அதிமுக - 2008
காங்கிரஸ் - 592
பாஜக - 308
கடந்த தேர்தல்களில் அதிமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து வந்த பாஜக, இம்முறை தனியாக களம் கண்டு குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி போல் அல்லாமல் தனியாக பாஜக போட்டியிட்டு இந்த வெற்றியை பெற்றிருப்பதாக அக்கட்சி தலைவர்கள் கருதுகின்றனர். இதுவே அண்ணாமலை அவர்களின் பேச்சிலும் வெளிப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டை (134) முதன்முறையாக பாஜக கைப்பற்றி இருப்பதால் அக்கட்சி உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குடிக்கும்போது கூப்பிடல... கோபத்தில் நண்பர் செய்த பகீர் காரியம்... சென்னையில் பரபரப்பு..!
மற்ற செய்திகள்