Naane Varuven M Logo Top

அதிவேக பைக் பயணம்.. சரணடைந்த TTF வாசன்.. அடுத்தடுத்து நடந்தது என்ன??

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பைக்கர் TTF வாசன் சரணடைந்தை அடுத்து, தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிவேக பைக் பயணம்.. சரணடைந்த TTF வாசன்.. அடுத்தடுத்து நடந்தது என்ன??

Also Read | சாப்பிட சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி மகள்.. 10வது படித்த 'கூலி தொழிலாளர்' தந்தையின் அசாத்திய கண்டுபிடிப்பு.!! நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பைக்கர் TTF வாசன் என்பவர், பிரபல யூடியூபரான் ஜி.பி. முத்து என்பவரை தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டியதுடன் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

பொது இடத்தில், அதிக வாகனம் சென்று கொண்டிருக்கும் போது, விதிகளை மீறி செயல்பட்டதாக TTF வாசன் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில், தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவிலும், மோட்டார் வாகன சட்டப்படி பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய இரண்டு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் TTF வாசன் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், இந்த வழக்குகள் தொடர்பாக TTF வாசனை போலீசார் தேடி வந்த நிலையில், மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு அவர் சரணடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

நேற்று காலை சரணடைந்த வாசன், மாலை வரை நீதிமன்ற கூண்டில் அமர்ந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, இரண்டு நபர்களின் உத்தரவாதம் கொடுத்த பின், மாலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். போத்தனூர் வழக்கில் வாசன் சரணடைந்த நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கிற்காக வருகின்ற வெள்ளிக்கிழமை (30.09.2022) TTF வாசன் ஆஜராக இருப்பதாக காவல்துறை வட்டார தரப்பில் இருந்து நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது.

Also Read | "எது ஆதார் கார்டு இருந்தா தான் பந்தியா?".. திருமண மண்டபத்தில் நடந்த ட்விஸ்ட்!!.. விருந்தாளிகளை சோதிக்க வெச்ச முடிவு!!

TTF, TTF VASAN, GP MUTHU, BIKER TTF VASAN, SURRENDER, COURT, BAIL

மற்ற செய்திகள்