"Queency-யோட Date பண்ணுவேன்".. Bigg Boss Kondattam கேள்வி Task-ல் மணிகண்டா பதில்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிக்பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் ஒன்றிணையும் பிக்பாஸ் கொண்டாட்டம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

"Queency-யோட Date பண்ணுவேன்".. Bigg Boss Kondattam கேள்வி Task-ல் மணிகண்டா பதில்..!

                                                Image Credit : Vijay Televison 

தமிழில் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி, இதுவரை மொத்தம் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இதன் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்திருந்தது.

BiggBoss Mankanta rajesh says he will date with Queency

Image Credit : Vijay Televison

மொத்தம் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் முன்னேறி இருந்தனர். மொத்தமுள்ள 21 போட்டியாளர்களில் இருந்து இந்த மூன்று பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த சூழலில், ஆறாவது பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பிக் பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு இன்டர்வியூகள் கொடுத்து வருவதும், பல இடங்களில் செல்லும் போது மக்கள் அவருக்கு கொடுக்கும் அமோக வரவேற்பும் ஆகும்.

BiggBoss Mankanta rajesh says he will date with Queency

Image Credit : Vijay Televison

இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சி வரும் 12 ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு கேள்வி வருகிறது. அதற்கு போட்டியாளர்கள் பதிலளிக்கின்றனர். அப்போது, அசீமிற்கு "பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் ஒருவரைப்பற்றி புத்தகம் எழுத வேண்டும் என்றால் யாரைப்பற்றி எழுதுவீர்கள்?" என கேள்வி வருகிறது. அதற்கு பதில் அளிக்கும் அசீம்,"ஜனனியை பத்தி எழுதுவேன். ஈழம் - கோடம்பாக்கம் என்ற தலைப்புல எழுதுவேன்" என்கிறார்.

அவரை தொடர்ந்து, தனலெக்ஷ்மி "வீட்டுல ஒருத்தரா மாறனும்னா யாரா மாறுவீங்க-ன்னு இருக்கு.  அசீம் அண்ணாவா மாறுவேன்" என்கிறார்.  அப்போது தொகுப்பாளர் பிரியங்கா ரெண்டுக்கும் பெருசா வித்தியாசம் இருக்காது" என கலகலத்தபடி சொல்கிறார். அதன் பிறகு,"வாய்ப்பு கிடைச்சா பிக்பாஸ் வீட்ல யாரோட டேட் பண்ணுவீங்க?" என மணிகண்டாவிடம் கேட்கப்படுகிறது. அதற்கு குயின்சியுடன் டேட்டிங் செல்வேன் என பதில் அளிக்கிறார் மணிகண்டா.

BiggBoss Mankanta rajesh says he will date with Queency

Image Credit : Vijay Televison

பின்னர், விக்ரமன் பேசுகையில்,"பிக்பாஸ் வீட்ல Gossip Guy யாருனு இருக்கு. நான் அசீமை சொல்றேன்" என்றார். அப்போது அசீம்,"பேசுறவங்களே ஆயிரம் Gossip பேசிருக்காங்க. அதை அவங்களே சொல்லும்போது சிரிப்பா இருக்கு" என்கிறார். இப்படி பல விறுவிறுப்பான சம்பவங்களால் பிக்பாஸ் கொண்டாட்டம் நிறைந்திருக்கிறது.

 

BIGGBOSS, BIGGBOSSKONDATTAM, MANIKANTARAJESH, QUEENCY

மற்ற செய்திகள்