GP Muthu: "தலைவர் ஆனாதான் அதிகாரம் கிடைக்கும்.. அப்ப இத செய்ய முடியும்".. சொல்லி அடித்த GP முத்து..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் GP முத்து. முன்னரே, தலைவர் ஆனால் தான் யாருக்கு என்ன செய்யலாம் என யோசித்து செயல்பட முடியும் என அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் போட்டியில் சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது.

GP Muthu: "தலைவர் ஆனாதான் அதிகாரம் கிடைக்கும்.. அப்ப இத செய்ய முடியும்".. சொல்லி அடித்த GP முத்து..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டின் கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றிருக்கிறது. இதில் சாந்தி, ஜி.பி. முத்து மற்றும் ஜனனி ஆகியோர் போட்டிபோட்டனர். கைப்பிடிகள் கொண்ட கடிகாரம் போன்ற வீலில் அதிக நேரம் இருப்பவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இதில் முதலில் சாந்தி அவுட் ஆக, நெடுநேரம் போராடி ஜனனியும் வெற்றியை தவறவிட்டார். இறுதி வரையில் டாஸ்க்கில் தாக்குபிடித்த GP முத்து கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, GP முத்து தலைவர் பதவியை பற்றி பேசுகையில்,"தலைவர்‌ ஆனால்தான் யாருக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்ய முடியும். அதுக்கான அதிகாரமும் அப்போதுதான் கிடைக்கும்" எனக் கூறியிருந்தார். இதனையடுத்து நடைபெற்ற டாஸ்க்கில் அவர் வெற்றி பெற்று கேப்டனாகவும் பொறுப்பேற்றிருக்கிறார். தலைவர் பதவி பற்றி பேசியிருந்த GP முத்து தற்போது கேப்டனாகி உள்ளதால் பிக்பாஸ் வீடு சுவாரசியம் நிரம்பியதாக மாறியுள்ளது என்றே சொல்லவேண்டும்.

BIGGBOSS6, BIGGBOSS6 TAMIL, GP MUTHU

மற்ற செய்திகள்