இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த பென்னி தயாள்.. எதிர்பாராமல் தாக்கிய டிரோன் கேமரா.. பரபர வீடியோ!!.. என்ன ஆச்சு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ் சினிமாவில் சிறந்த பாடகர்களில் ஒருவராக இருப்பவர் பென்னி தயாள். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் எக்கச்சக்க பாடல்களை பாடி உள்ள பென்னி, சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டுள்ளார்.

இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த பென்னி தயாள்.. எதிர்பாராமல் தாக்கிய டிரோன் கேமரா.. பரபர வீடியோ!!.. என்ன ஆச்சு?

                                        Images are subject to © copyright to their respective owners

இது தவிர ஆல்பம் பாடல்களையும் பென்னி தயாள் உருவாக்கி உள்ள சூழலில், பல இடங்களில் நடந்த கான்சர்ட் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி இருக்கையில், சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராத வகையில் நடந்த சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது தொடர்பான விஷயம் இணையத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாக்கிய டிரோன் கேமரா

சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பென்னி தயாள் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில், மேடையில் அவர் ஊர்வசி பாடலை பாடி கொண்டிருந்த சமயத்தில் தான் எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கே அரங்கேறி இருந்தது. அங்கே நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்து கொண்டு பறந்த படி இருந்த டிரோன் கேமரா, பென்னி தயாள் அருகே வட்டமிட்டபடி இருந்துள்ளது.

Benny Dayal hit by drone camera head and fingers get bruised

Images are subject to © copyright to their respective owners

அந்த சமயத்தில், திடீரென அந்த டிரோன் கேமரா, பென்னி தயாளின் தலை பகுதியில் தாக்கி உள்ளதாக தெரிகிறது. மிகவும் எனர்ஜியுடன் பாடிக் கொண்டிருந்த பென்னி தயாள், திடீரென நடந்த இந்த சம்பவத்தால் நிலைகுலைந்து போனார். அப்படியே அவர் வலியுடன் கீழே உட்கார, அங்கிருந்தவர்கள் மத்தியிலும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தலைபகுதியில் காயம்?

அடுத்த கணமே பென்னி தயாள் அருகே வந்து என்ன நடந்தது என கவனித்ததுடன் அவரை அங்கிருந்து உடனடியாக மீட்டு சென்றனர். தொடர்ந்து, இதுகுறித்து வெளியான தகவலின் படி பென்னி தயாளின் தலையின் பின்பக்கம் மற்றும் இரண்டு விரல்களில் காயம் அடைந்திருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

Benny Dayal hit by drone camera head and fingers get bruised

இந்த நிலையில், இது தொடர்பாக ஒரு வீடியோவையும் பென்னி தயாள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், தனக்கு நடந்த விபத்து குறித்து விவரித்த பென்னி தயாள், தன்னிடம் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

அறிவுரை கொடுத்த பென்னி தயாள்

அதே போல, டிரோன் கேமராவின் விசிறிகள் தனது தலையின் பின்புறம் மற்றும் கைவிரயல்களில் காயம் ஏற்படுத்தியதை பற்றியும் இந்த வீடியோவில் பென்னி தயாள் பேசி இருந்தார். மேலும், அனைத்து கல்லூரிகள், நிர்வாகங்கள் உள்ளிட்டவை சான்றிதழ் பெற்ற டிரோன் கேமரா ஆப்ரேட்டர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Benny Dayal hit by drone camera head and fingers get bruised

தொடர்ந்து, ஒருவர் பாடிக் கொண்டிருக்கும் போது இப்படி டிரோன் கேமராக்களை இயக்குவதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இவ்வளவு அருகே செல்லும் போது அதன் ஆபத்து பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் டிரோன் கேமரா இயக்குபவர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.

 

 

BENNY DAYAL, CONCERT

மற்ற செய்திகள்