கொரோனா ‘பணிகளுக்காக’ பம்பரமாய் சுற்றிய பீலா ராஜேஷ் குடும்பத்தில் ‘இப்போது’ இப்படி ஒரு சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை எல்.என்.வெங்கடேசன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கியபோது, கொரோனா தடுப்பு பணிகளை முன்னின்று திறம்பட செய்து வந்ததற்காக அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர்.
முன்னதாக கொரோனா தொற்று தொடர்பான விவரங்களை தினமும் மாலை மீடியாக்களிடம் விளக்கியதன் மூலம் கவனம் பெற்றவர் பீலா ராஜேஷ், பின்னர் வணிக வரித்துறைச் செயலாளராக அதிரடியாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அதிகாரியாகவும் மாற்றப்பட்டதை அடுத்து, அந்த பணியை தற்போது செய்து வருகிறார்.
இந்த நிலையில், பீலா ராஜேஷ் தந்தையும், சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் ராணியின் கணவரும், முன்னாள் டி.ஜி.பி.யுமான எல்.என்.வெங்கடேசன் காலமானார். தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட வெங்கடேசன் 1962 ஆம் பேட்ச் ஐ.பி.எஸ்.அதிகாரியாக தொடங்கி, காவல்துறையினருக்கு முன்மாதிரியாக விளங்கியவர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக, இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னை கொட்டிவாக்கத்தில் காலமானார். அவருக்கு பல்வேறு முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்