சென்னையில் வண்ணாரப்பேட்டை பக்கம் போனீங்களா.. அந்த அழகான மாற்றத்தை கவனிச்சீங்களா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: பாண்டிச்சேரி என்றாலே அங்கிருக்கும் கலர்கலரான பெயிண்ட்டிங்களும் ஓவியங்களும் தான். இதை ரசிப்பதற்காகவே பலர் பாண்டிச்சேரி போய் ரசிப்பது உண்டு.

சென்னையில் வண்ணாரப்பேட்டை பக்கம் போனீங்களா.. அந்த அழகான மாற்றத்தை கவனிச்சீங்களா!

அதேபோல சென்னையும் தற்போது கலர்புல்லாக மாறி வருகிறது. இதற்கு காரணம் தற்போது அனைத்து இடங்களில் அமைக்கப்படும் மெட்ரோ திட்டம். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் சேவை தற்போது கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மாறியுள்ளது.'

மெட்ரோ ரயில் பாலங்கள்:

எப்படி என்று குழப்பமாக இருக்கிறதா?. ஆம், பொதுவாக மெட்ரோ ரயில் செல்லும் பாதை பாலங்கள் மேலேயும் சில இடங்களில் சுரங்கம் தோண்டியும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, மெட்ரோ ரயில் பாலங்கள் பெரிய தூண்களை போல் இருப்பதால் அரசியல் கட்சியினர், பல்வேறு தரப்பினரும் விளம்பர சுவரொட்டி, போஸ்டர்களை ஒட்டி சுவரை நாசபடுத்தி வருவது வழக்கம்.

Beautiful paintings on Chennai New Washermenpet Metro Bridge

அதனை தடுக்கும் வகையில் மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இனி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சொந்தமான தூண்கள் மற்றும் சுவர்களில் போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் சிறையோ, 1000 ரூபாய் அபராதமோ அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது.

கண்ணை கவரும் ஓவியங்கள்:

அதுமட்டுமில்லாமல் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளான விமானம் நிலையம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை, கோயம்பேடு மேம்பாலம், அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரை, மெட்ரோ ரயில் நிலைய துாண்கள், திருமங்கலம் மேம்பாலங்கள் அழகுப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றது. வண்ண ஓவியங்கள் வரைதல், மரம், செடிகளை நட்டு பசுமையாக பராமரித்தல், வண்ண ஒளிரும் விளக்குகளால் அழகு படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம்:

இந்த நிலையில் தற்போது புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய தூண்களில் வரையப்பட்டுள்ள அழகிய ஓவியங்கள் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் விதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போன்ற ஓவியங்கள் அடங்கும்.

Beautiful paintings on Chennai New Washermenpet Metro Bridge

அதுமட்டுமல்லாமல், சின்ன மலை மெட்ரோ பாலங்களில் அழகு அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்த கண்ணை பறிக்கும் ஓவியங்கள் பார்ப்போரை ஈர்க்கும் வகையிலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, இயற்கையை போற்றும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புகைப்படங்கள் அவ்வழியாக செல்லும் பயணிகளால் புகைப்படம் எடுக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

PAINTINGS, CHENNAI, NEW WASHERMENPET, METRO, BRIDGE, புதிய வண்ணாரபேட்டை, ஓவியங்கள், மெட்ரோ

மற்ற செய்திகள்