தெருக்கூத்துக் கலைஞர்கள், பெண்கள், மாணவிகளுக்கு பகாசூரன் சிறப்புக்காட்சி.. மாஸ் காட்டிய கடலூர் மருத்துவர்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கியுள்ளார். இப்படம் திரையரங்கில் வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது.

தெருக்கூத்துக் கலைஞர்கள், பெண்கள், மாணவிகளுக்கு பகாசூரன் சிறப்புக்காட்சி.. மாஸ் காட்டிய கடலூர் மருத்துவர்.!

இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார். கடலூர், சேலம், ஏற்காடு, திருச்சி ஆகிய இடங்களில் ‘பகாசுரன்’ கதை நகர்கிறது. இப்படத்தில் செல்வராகவன் கட்டைக்கூத்து கலைஞராக நடித்துள்ளார்.

Bakasuran special show for drama artists and women

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.

Bakasuran special show for drama artists and women

முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, பகாசூரன் படம் கல்லூரி பெண்களை மிரட்டியும் அவர்களின் வறுமை சூழலை பயன்படுத்தியும் ஆன்லைன் செயலிகள் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தும் உண்மை சம்பவங்கள் குறித்த தகவல் தனக்கு தெரியவந்ததாகவும், அதனால் உடனடியாக  அதை படமாக்க வேண்டும் என, தானே வாடிக்கையாளராக சென்று அந்த பெண்களை காவல்துறை மற்றும் பத்திரிகை நண்பர்கள் உதவியுடன் மீட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Bakasuran special show for drama artists and women

இதுபோன்ற ஆன்லைன் பாலியல் குற்றங்களில் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதாகவும், பலரும் இதில் பணத்தை இழந்துள்ளதாகவும், இப்படி பெரும் குற்றப் பின்னணி இதில் உள்ளதாகவும் கூறி மோகன்.ஜி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். செல்போன்களை நாம் நம் பிள்ளைகள் நல்லனவற்றுக்காக பயன்படுத்துவதாக நினைப்போம், பெரும்பாலானோர் நல்ல விதமாக பயன்படுத்தினாலும் சிலர் பணம் சம்பாதிக்கும் மோகம், தவறுதலான மிரட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு பயந்து இப்படியான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மொபைல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம் என பேசிய மோகன்.ஜி, அதை பற்றியே பகாசூரன் படம் பேசப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

Bakasuran special show for drama artists and women

இந்நிலையில் இப்படத்தை கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில், அங்குள்ள தெருக்கூத்து கலைஞர்கள், மகளிர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புக் காட்சிக்காக அழைத்து வந்து படத்தை பார்த்து கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த சிறப்புக்காட்சியை கடலூரைச் சேர்ந்த பிரபல மருத்துவர் கலைக்கோவன் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்துள்ளார். இப்படத்தை பார்த்த மக்கள் பெரும் ஆரவாரத்துடன் படத்தை பாராட்டினர்.

BAKASURAN, CUDDALORE

மற்ற செய்திகள்