" விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு தான் இந்த படத்தை எடுத்தேன்".. பிரபல OTT யில் பகாசுரன்.. மோகன் G வெளியிட்ட வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பகாசுரன் படம் தற்போது பிரபல ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் மோகன் ஜீ வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.

" விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு தான் இந்த படத்தை எடுத்தேன்".. பிரபல OTT யில் பகாசுரன்.. மோகன் G வெளியிட்ட வீடியோ..!

                       Images are subject to © copyright to their respective owners.

பகாசூரன்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். நட்டி, ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன் கட்டைக்கூத்து கலைஞராக நடித்துள்ளார்.

சமூக வலைத் தளங்களில் அதிகம் பிரபலமாக உள்ள லயா, பகாசூரன் திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி உள்ளார். சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாரூக் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் தற்போது ரசிகர்ளுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த சூழ்நிலையில் இந்த படம் தற்போது அமேசான் பிரைம்-ல் வெளியாகி இருக்கிறது.

வீடியோ

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள மோகன் ஜி அதில் பேசுகையில்," பகாசுரன் திரைப்படம் அமேசான் பிரைம்-ல வந்திருக்கு. திரையரங்குகளில் நிறைய பேர் போய் பார்த்தீங்க. முக்கியமா பெரியவங்க நிறைய பேரு பார்த்தாங்க. இளைஞர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கவில்லை என தெரியும். அதுக்கு காரணம் நெகட்டிவான, தப்பு தப்பான விமர்சனங்களும் தான். பிளான் பண்ணியே அப்படி ஒரு கருத்தை உருவாக்குனாங்க. இப்போ அமேசான் பிரைம்-ல வந்ததுக்கு அப்புறம், அன்னைக்கு குறை சொன்ன நிறைய பேரு படத்தை பத்தி பாசிட்டிவ்வா பேசுறாங்க.

Images are subject to © copyright to their respective owners.

படம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றாங்க. இது எதிர்பார்த்தது தான். சந்தோஷமா இருக்கு. இந்த படம் பத்தி உங்களுக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால், இந்த படம் பேசும் கருத்து முக்கியமானது. இப்போ சமூகத்துல நடக்குற விஷயங்களை இந்த படம் பேசிருக்கு. இதை உங்க குடும்பத்தோட பாருங்க. தந்தை - மகள் அல்லது தந்தை - மகன் இடையே புரிதலை இந்த படம் ஏற்படுத்தும். பெருசா அவார்ட் வாங்கிடணும்னு இந்த படம் எடுக்கல. திரௌபதி மாதிரி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தணும், சமூகத்துல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தணும்னு தான் இந்த படத்தை எடுத்தேன். இந்த படத்தை அமேசான் பிரைம்ல பாருங்க. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்" எனக் கூறியுள்ளார்.

 

BAKASURAN, MOHAN G

மற்ற செய்திகள்