"நாமினேஷன் ஸ்டைல மாத்தணும்".. " Safe-ஆ ஆடறவன குத்தி வெளிய அனுப்பனும்".. Bigg Boss வீட்டில் அசீமின் புது வியூகம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

"நாமினேஷன் ஸ்டைல மாத்தணும்".. " Safe-ஆ ஆடறவன குத்தி வெளிய அனுப்பனும்".. Bigg Boss வீட்டில் அசீமின் புது வியூகம்.!

Also Read | "எனக்கு ஒரு செய்தி கெடச்சுருக்கு".. கொல்லப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு.. நண்பருக்கு ஷ்ரத்தா அனுப்பிய மெசேஜ்!!.. அதிர்ச்சி!!

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

பொம்மை டாஸ்க், ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. அனைத்து போட்டியாளர்களும் தங்களது குற்றங்களை வழக்காக முன் வைக்க, அதனை நீதிமன்றம் மூலம் வாதாடி, அந்த வழக்கில் தீர்ப்பை எட்ட வேண்டும். அந்த வகையில், ADK - அசீம் விவகாரம், விக்ரமன் - அமுதவாணன் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள், போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டும் வருகிறது.

azeem speaking about new strategy in bigg boss house

முன்பு நடந்த சண்டைகளை வைத்து சில வழக்குகள் நடைபெறுவதால் வாதாடும் சமயத்தில் தீப்பறக்கவும் செய்கிறது. இதற்கு மத்தியில், சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் தங்களது ஸ்டைலில் போட்டியையும் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, அசீம் தனது பாணிக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு வாரமும் அப்டேட் செய்து கொண்டும் சக போட்டியாளர்களிடம் செயல்பட்டு வருவதும் தெரிகிறது.

இந்த நிலையில், குயின்சி மற்றும் நிவாஷினி குறித்தும் கேம் பிளான் குறித்தும் அசீம் பேசிய விஷயங்கள், அதிகம் வைரலாகி வருகிறது.

நிவாஷினி சொல்வதை தான் குயின்சி கேட்பார் என்றும் குயின்சி சொல்வதை தான் நிவாஷினி கேட்பார் என்றும் அசீம் போட்டியாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஷினியுடன் குயின்சியை ஒப்பிட்டு அசீம் பேசியதை முற்றிலும் மறுத்து பேசும் குயின்சி, "அப்படி எதுவும் இல்லை" என்றும் கூறுகிறார். நிவாஷினி கடந்த வாரம் எலிமினேட் ஆகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

azeem speaking about new strategy in bigg boss house

இதற்கு மத்தியில் தொடர்ந்து பேசும் அசீம், "எல்லாத்தையும் இழந்து நிக்குறவன் ரொம்ப டேஞ்சர். அவன் எதையும் செய்ய துணிஞ்சுடுவான். இனிமே நாமினேஷன் ஸ்டைலை புதுசா பண்ணனும். அப்படியே சேஃப்பா விளையாடுறவன் எல்லாரையும் குத்தி வெளிய அனுப்பிடனும்" என்றும் தெரிவிக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்தே தொடர்ந்து பல Strategy-களை கையாள்வது குறித்து அசீம் அடிக்கடி பேசி வருகிறார். இந்த வார நாமினேஷன் Open முறையில் நடந்திருந்த நிலையில், இதுகுறித்து பல நாள் முன்பே சக போட்டியாளர்களிடம் பேசி இருந்த அசீம், Open நாமினேஷன் எப்போது நடக்கும் என காத்திருப்பதாகவும் அது சிறப்பாக இருக்கும் என்பது போன்றும் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இப்படி பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து வரும் டாஸ்க்குகள் மத்தியில், அசீம் சொல்லும் Game Strategy கூட அதிகம் பார்வையாளர்கள் மத்தியில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | "சேர்ந்து வாழலாம் வா".. மனைவியை சமாதானம் செய்ய மாமியார் வீட்டுக்கு போன கணவர் கொலை..! தமிழகத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்

BIGG BOSS, BIGG BOSS TAMIL, BIGG BOSS TAMIL 6, VIJAY TV, AZEEM, AZEEM ABOUT HIS NEW STRATEGY

மற்ற செய்திகள்