அடேங்கப்பா! ஜேம்ஸ்பாண்ட்,'ரஜினி'-லாம் கூட...'இப்டி' பண்ணிருக்க மாட்டாங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி தெறி ஹிட்டடிப்பது உண்டு.அந்த வகையில் ஆட்டோ டிரைவரின் செயல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
![அடேங்கப்பா! ஜேம்ஸ்பாண்ட்,'ரஜினி'-லாம் கூட...'இப்டி' பண்ணிருக்க மாட்டாங்க! அடேங்கப்பா! ஜேம்ஸ்பாண்ட்,'ரஜினி'-லாம் கூட...'இப்டி' பண்ணிருக்க மாட்டாங்க!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/auto-driver-changing-the-wheel-of-the-auto-while-running-thum.jpg)
சாலையில் ஆட்டோ ஒன்றை ஓட்டிச்செல்லும் டிரைவர் ஆட்டோ ஓடிக்கொண்டு இருக்கும்போதே,டயரை மாற்றுவதற்காக ஆட்டோவை ஒருபக்கமாக தூக்குகிறார். அப்பொழுது ஆட்டோ 2 டயரில் சென்று கொண்டிருக்கிறது. உடனே ஆட்டோவில் பின்னால் இருந்தவர் ஆட்டோ டயரை கழட்டுகிறார்.வேறு ஒரு ஆட்டோவில் வந்த ஒருவர் மாற்று டயரை வழங்க அந்த டயரை மாட்டுகிறார்.
I’ve seen a lot of tyres being changed.......but this one is James Bond style !
— Harsh Goenka (@hvgoenka) September 22, 2019
இவ்வளவும் ஆட்டோ ரன்னிங்கில் இருக்கும்போதே நடக்கிறது.இந்த வீடியோவை ஹர்ஷ் கோங்கா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,''நான் நிறைய டயர் மாற்றி பார்த்திருக்கிறேன்.ஆனால் இதுபோல ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலை பார்த்ததில்லை,''என தெரிவித்திருக்கிறார்.தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.