"நான் கேட்டது ரூ.8000.. மிஷின் கொடுத்தது ரூ.20 ஆயிரம்".. அள்ளிக்கொடுத்த ATM.. ஆடிப்போன நபர்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ATM இயந்திரம் கூடுதலாக பணம் அளித்ததால் பணம் எடுக்க சென்றவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

"நான் கேட்டது ரூ.8000.. மிஷின் கொடுத்தது ரூ.20 ஆயிரம்".. அள்ளிக்கொடுத்த ATM.. ஆடிப்போன நபர்.. வீடியோ..!

அறிவியல் வளர்ச்சி கடந்த 100 ஆண்டுகளில் பல வேலைகளை சுலபமாக்கியுள்ளது. அத்துடன் இணைய சேவையின் வருகையும் மனித குலத்திற்கே பல நன்மைகளை அளித்து வருகிறது. அதில் ஒன்று தான் ATM-கள். பெரு நகரங்கள் முதல் குக்கிராமம் வரையில் ATM இயந்திரங்களின் வருகை சாத்தியமாகியுள்ளது. பணம் எடுக்கவோ, செலுத்தவோ வங்கிக்கு சென்று வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லாததால் மக்களும் ATM-களை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் எல்லா நன்மையிலும் சில சிரமங்களையும் சேர்ந்தே சந்திக்க வேண்டியிருக்கும்.

ATM Dispenses extra amount to users in chennai

அப்படி சில நேரங்களில் மோசமான அனுபவங்களையும் சிலர் ATM இயந்திரத்தால் பெற்றிருப்பார்கள். ஆனால், சென்னையில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. அதாவது கேட்கப்பட்ட தொகையை விட கூடுதலாக பணத்தை அள்ளி கொடுத்திருக்கிறது ஒரு ATM. இதனால் பணம் எடுக்க சென்றவர்கள் வெலவெலத்துப் போயிருக்கின்றனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ATM-க்கு சென்றிருக்கிறார். 8000 ரூபாய் பணம் எடுக்க அவர் நினைத்திருக்கிறார். தனது கார்டு மூலமாக தனக்கு வேண்டிய தொகையை அவர் உள்ளீடு செய்ய கொஞ்ச நேரத்தில் அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். காரணம், அவருக்கு 20000 ரூபாய் பணம் அளிக்கப்பட்டது தான். இதனால் அவர் குழப்பமடைந்த நிலையில் அடுத்து வந்த சிலருக்கும் இதேபோன்று கூடுதலாக பணம் கிடைத்திருக்கிறது.

ATM Dispenses extra amount to users in chennai

உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் தவறுக்கான காரணத்தை கண்டுபிடித்திருக்கின்றனர். அதாவது ATM இயந்திரத்துக்கு உள்ளே 200 ரூபாய் வைக்கப்பட வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டதே இந்த குளறுபடிகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

CHENNAI, ATM, CASH

மற்ற செய்திகள்