‘அத்திவரதர் தரிசனம்’!.. ‘சென்னையை பின்னுக்கு தள்ளிய காஞ்சி’.. அடேங்கப்பா 2 மாசத்துல மட்டும் இவ்வளவு பேரா..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அத்திரவரதர் தரிசனத்துக்கு அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் சுற்றுலா தளங்களில் காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

‘அத்திவரதர் தரிசனம்’!.. ‘சென்னையை பின்னுக்கு தள்ளிய காஞ்சி’.. அடேங்கப்பா 2 மாசத்துல மட்டும் இவ்வளவு பேரா..?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு நடைபெறும் என்பதால் அத்திவரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இந்த விழா நடைபெற்ற ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3.59 கோடி பேர் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து ஆகஸ்ட் 16ம் தேதி மீண்டும் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது. ஆனாலும் கோயிலுக்கு பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் அவர் வீற்றிருந்த அனந்தசரஸ் குளத்தை பார்வையிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் சென்னையை பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காஞ்சிபுரத்துக்கு 5.82 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். சென்னைக்கு 2.75 கோடி சுற்றுலா பயணிகள் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

KANCHIPURAM, ATHIVARADAR, CHENNAI, TOURIST