'பலரும் எதிர்பார்த்த திருவொற்றியூர் தொகுதி '... 'ஆனா எதிர்பாராத ஷாக் கொடுத்த தொகுதி மக்கள்'... சீமான் நிலை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாம் தமிழர் கட்சி பல இடங்களில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று (மே.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் பல இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் பல இடங்களில் பின்னடைவைச் சந்திக்கின்றனர். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் முன்னிலையில் உள்ளது. பல அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்தங்கியுள்ளார்.
திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சங்கர் 2818 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அவரைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர் குப்பன் 1961 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதனை அடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 1639 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் பின்தங்கியுள்ளார்.
மற்ற செய்திகள்