இப்படியொரு வீடா...! யாருங்க அவரு...? 'எனக்கே பார்க்கணும் போல இருக்கே...' 'யாராச்சும் அவரோட போன் நம்பர் கொடுங்க...' - பாராட்டும் பிரபல தொழிலதிபர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் ஆட்டோவில் வீடு உருவாக்கியுள்ள சென்னையை சேர்ந்த இளைஞர் அருண் பாபுவை மகிந்த்ரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இப்படியொரு வீடா...! யாருங்க அவரு...? 'எனக்கே பார்க்கணும் போல இருக்கே...' 'யாராச்சும் அவரோட போன் நம்பர் கொடுங்க...' - பாராட்டும் பிரபல தொழிலதிபர்...!

இந்திய தொழிலதிபர்களில் ஆனந்த மகிந்த்ரா புதுமையானவர். படைப்பு திறன் இருக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

அந்த வகையில், சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆட்டோவில் ரூ. 1 லட்சம் மதிப்பில் வீடு தயாரித்துள்ளது அவரை பிரமிக்க வைத்துள்ளது.

இந்த ஆட்டோவில் வீட்டில் இருப்பதை போன்றே கழிவறை, குளியலறை, படுக்கையறை , சமையலறை என அனைத்து வசதிகளும் உண்டு. வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற வசதிகளும் உள்ளன. இது அனைத்தையும் தாண்டி இந்த ஆட்டோ வீட்டின் மேலே 250 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டியும் அமைத்துள்ளார்.

அனைத்து வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த டைனி வீட்டை உருவாக்க மொத்தம் ஆகியிருந்தது ஒரு லட்சம் ரூபாய் பணம் தான்.

நாட்டிலேயே சிறிய நடமாடும் வீடு இதுதான் முதல்முறை. இந்த வீட்டுக்கு சோலோ 0.1 என்று அருண் பாபு பெயரிட்டுள்ளார்.

இந்த ஆட்டோ தயாராகி ஒரு ஆண்டுகள் கழிந்த நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா, தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆட்டோவின் போட்டோவை வெளியிட்டு இளைஞர் அருண்குமாரின் திறமையை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்த சிறிய இடத்தில் ஒரு வீட்டையே அமைக்க முடியும் என்று சமூகத்துக்கு எடுத்துக் காட்டிய இளைஞர் அருண் பிரபுவின் படைப்பு திறனை பாராட்ட வார்த்தைகளே இல்லையென்றும் ஆனந்த் மகிந்த்ரா தெரிவித்துள்ளார். மேலும், அருண் பிரபுவை தொடர்பு கொள்ள மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். எங்களது பொலிரோ பிக்கப் வேனுக்கு இது போன்ற டிசைனை வடிவமைக்க அருண் முன்வருவாரா... அவரின் இணைப்பு எண்ணை தர முடியுமா? என்று ஆனந்த் மகிந்த்ரா கேட்டுள்ளார்.

மற்ற செய்திகள்