'உங்கள புரிஞ்சிக்கல, சண்ட போட்டேன்'... 'ஆனா கடைசியா உங்க முகத்த பாக்க முடியலியே அப்பா'... மனதை நொறுக்கும் மகளின் பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாமல் போனது குறித்து, மகள் எழுதியுள்ள கடிதம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'உங்கள புரிஞ்சிக்கல, சண்ட போட்டேன்'... 'ஆனா கடைசியா உங்க முகத்த பாக்க முடியலியே அப்பா'... மனதை நொறுக்கும் மகளின் பதிவு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்புத் துறை அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கடந்த 26ம் தேதி மாரடைப்பால் காலமானார். தந்தையின் மறைவு குறித்து அறிந்த அவரது மகளும், மருத்துவருமான நாச்சியார் விமானம் மூலம் இலங்கை வந்தார். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் தந்தையின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நாச்சியார், தந்தைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து விட்டீர்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?. எனது மனதை நொறுங்கச் செய்யும் அந்த அழைப்பு சில நாட்களுக்கு முன்பு வந்தது. முடிவில்லா கண்ணீருடன் சில மணி நேரம் பயணித்து நான் வீட்டிற்கு வந்தும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன்.

ஆரம்பத்தில் நீங்கள் என்னை மருத்துவர் ஆக்க நினைத்தபோது, அதைப் புரிந்துகொள்ளாமல், உங்களிடம் சண்டையிட்டேன். பலமுறை குடும்ப நிகழ்ச்சிகளைத் தவற விட்டதற்காக உங்களைக் குற்றம் சாட்டியுள்ளேன். ஆனால் இன்று ஒரு மருத்துவராக எனது கடமையைச் செய்கிறேன். அதில் நீங்கள் பெருமை கொள்வீர்கள். ஒரு மகளாகத் தந்தையைப் பார்க்க முடியவில்லை என்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. நான் இப்போது உங்களுடன் இருக்க நினைத்தாலும், முகக்கவசம் மற்றும் 4 சுவர்களுக்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீங்கள் எங்குச் சென்றிருந்தாலும் முகமூடி அணிந்திருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் அது உங்களுக்குப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும்” என உருக்கத்துடன் கூறியுள்ளார். ஒரு மகள் தந்தைக்கு எழுதியுள்ள இந்த கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்