'இது பக்கா பிளான்'... 'சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன்'?... பரபரப்பு வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தையே அதிரச் செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை சம்பவத்தில், எதற்காக வில்சன் கொல்லப்பட்டார் என்பதற்கு குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்கள்.

'இது பக்கா பிளான்'... 'சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன்'?... பரபரப்பு வாக்குமூலம்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடியில், கடந்த 8ம் தேதி பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொடூரமான முறையில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. அதன்பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சூழ்நிலையில் கர்நாடகா மாநிலம் உடுப்பி ரெயில் நிலையத்தில் வைத்து வில்சனை சுட்டு விட்டு தப்பிய அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரையும் கர்நாடகா காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து இருவரும் தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இரண்டு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கியூபிராஞ்ச் போலீசார் கைதுச் செய்யப்பட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தியதில், எதற்காக  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அதில், '' தங்களது அமைப்பை சேர்ந்தவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வந்தார்கள். எனவே அவர்களுக்கு ஒரு பயத்தையும், எதிர்ப்பையும் காட்டவே வில்சனை கொலை செய்ததாக கூறியுள்ளார்கள். மேலும் போலீசார் தங்களை  என்கவுண்டர் செய்யகூடும் எனவும் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

MURDER, KILLED, TAMILNADUPOLICE, SUB INSPECTOR WILSON, KANYAKUMARI, SUSPECTED ASSAILANTS