"உங்களுக்கு பரிசு விழுந்துருக்கு".. ஆங்கிலத்தில் பேசிய பெண் குரலை நம்பி இத்தனை லட்ச ரூபாய் இழந்த இளைஞர்..! கடனில் தத்தளிக்கும் சோகம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆன்லைன் மூலமாக வந்த ஃபோன் கால் ஒன்றில் பரிசுப் பொருட்கள் விழுவதாக கூறி ஏமாற்றிய வலையில் அரியலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் 12 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார்.

"உங்களுக்கு பரிசு விழுந்துருக்கு".. ஆங்கிலத்தில் பேசிய பெண் குரலை நம்பி இத்தனை லட்ச ரூபாய் இழந்த இளைஞர்..! கடனில் தத்தளிக்கும் சோகம்..

அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது வாட்ஸ் அப்க்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு போன் அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பை ஏற்ற விமல்ராஜ் இது குறித்து விசாரிக்கும் பொழுது எதிர் முனையில் ஆங்கிலத்தில் பேசிய பெண் குரல் இங்கிலாந்தில் தங்கள் மகளது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட குலுக்களில் விமல்ராஜ்க்கு பரிசு விழுந்ததாக தெரிவித்திருக்கிறது.

இதைக் கேட்டதும் மிகவும் ஆர்வமாக அப்பெண் குரலிடம் பேசிய விமல்ராஜ், இந்த பரிசு விழுந்தால் தன் வீட்டில் தொண்டை புற்றுநோய் பாதிப்புடன் இருக்கும் தந்தையை காப்பாற்றலாம் என்று எண்ணி இருக்கிறார். அதனால் மேற்கொண்டு பரிசு குறித்து வினவி இருக்கிறார். அப்போது அந்த பெண் குரலோ, “இந்த பரிசை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் பணம் கட்ட வேண்டும். இந்த பரிசு விமான நிலையத்தில் இருக்கிறது. 35 ஆயிரம் ரூபாய் வரி கட்டி அந்த பரிசை ஹோம் டெலிவரி மூலமாக பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறி இருக்கிறது அந்த பெண் குரல்.

உடனடியாக அதை தயார் செய்து விமல்ராஜ் பணத்தை அனுப்பி இருக்கிறார். ஆனாலும் விடாத அந்த மோசடி கும்பல் விமல்ராஜின் ஆசையை தூண்டி 1 லட்சம், 2லட்சம் ரூபாய் என நாளடைவில் 12 லட்சம் ரூபாய் வரை பணத்தை அபகரிப்பு செய்திருக்கிறது. வாட்ஸ் அப்பில் வந்த ஃபோன் காலை நம்பி, ஏதோ ஆங்கிலத்தில் பேசும் ஒரு பெண் குரலை நம்பி 12 லட்சம் ரூபாய் வரை அவர்களது வங்கி கணக்கில் செலுத்திய விமல்ராஜ், தான் ஏமாற்றப்பட்டதை கடைசியாகவே உணர்ந்தார்.

ஆம், சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகும் அந்த பரிசு வரவில்லை என்பதை அறிந்த விமல்ராஜ், இதுகுறித்து காவல்துறையினிடம் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருக்கிறார். இவ்வளவு பெரிய தொகையை கட்டும் அளவுக்கு விமல்ராஜ் பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்தவர் இல்லை. அவர் இந்த பணத்தை எல்லாம் கடன் வாங்கி தான் அளித்திருக்கிறார். ஆம், விமல்ராஜ் தந்தை செல்வராஜ் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த பரிசு பொருட்களும் அதனுடன் கிடைக்கும் 33 லட்சம் ரூபாயும், தன் தந்தையின் சிகிச்சைக்கு உதவும் என நம்பி தான் அக்கம் பக்கத்தினிடம் கடன் வாங்கி விமல்ராஜ் இந்த பணத்தை அந்த மோசடி கும்பலின் வங்கி கணக்கில் செலுத்தி இருக்கிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BANK FRAUD, FRAUDSTER, FRAUD CALL, SPAM CALL

மற்ற செய்திகள்