'கடைசியா அவரு முகத்தை பாக்றவங்க பாருங்க...' 'கோடித்துணியை மூடுற நேரம் பார்த்து திடீர்னு...' - 75 வருஷ அன்பின் நெகிழ்ச்சி முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியலூரில் கணவன் உயிரிழந்த நிகழ்வை தாங்க முடியாமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேதுமணியன் மற்றும் கமலம் தம்பதிகள், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் காசான்கோட்டை கிராமத்த்தில் வசித்து வந்துள்ளனர்.
94 வயதான சேதுமணியன் அவர்களுக்கும் கமலம் அவர்களும் 75 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, தங்களின் மணவாழ்வை மகிழ்ச்சியுடன் கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக சேதுமணியன் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று உயிரிழந்துள்ளனர்.
75 வருடங்கள் எல்லா இன்ப துன்பங்களில் ஒன்றாகவே பங்குக்கொண்ட கணவர் விட்டு பிரிந்ததை சகிக்க முடியாமல் இருந்துள்ளார். மனைவி கமலம். உறவினர்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் அவரின் மனம் ஏற்க மறுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை சேதுமணியனுக்கு நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோடித்துணி போர்த்திக் கொண்டிருந்தனர். கணவரின் இறுதி சடங்கை பார்க்க முடியாமல் கமலம் பாட்டி கதறி அழுது அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
உறவினர்கள் மருத்துவமனை கொண்டு செல்ல முயன்றபோது அவரின் கமலம் பாட்டி அவர்களின் உயிர் கணவரை நோக்கி சென்றுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், தம்பதிகளின் உறவுகளுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கணவன் மற்றும் மனைவி இருவரையும் ஒன்றாக சுடுகாட்டில் அருகருகே அடக்கம் செய்துள்ளனர்.
75 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதியர்கள் இறப்பிலும் ஒன்றாக சென்றுள்ளனர் என்பது காசான்கோட்டை கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்