'முதலிரவு இப்ப முக்கியமா? மொதல்ல இதுக்கு பதில் சொல்லிட்டு போ'.. திருமணத்தன்று நடந்த சோக சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ளது ஆதிச்சனூர் கிராமம். இவ்வூரைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் இளமதி என்பவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.
ஆனால் திருமணத்திற்கு வந்த மொய்ப்பண கணக்கு மற்றும் இதர செலவுகள் குறித்த சரியான கணக்குகளை அன்று இரவு மணமகன் இளமதியும், அவரது தந்தை சண்முகமும் பார்த்தபோது கணக்கு இடித்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையில் பேச்சு முரண்பாடானது. இந்த நிலையில், (மண)மகன் இளமதி, தன் தந்தை சண்'முகத்துக்கு' நேரே பார்த்து நாளை காலை பேசிக்கொள்ளலாம். இந்த கணக்கை எல்லாம் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று பேசியுள்ளார்.
ஆனால் இளமதியின் தந்தையோ, ‘இப்போ முதலிரவுக்குச் செல்வதுதான் முக்கியமா? கணக்கு வழக்கு முக்கியமா.. மரியாதையாக சரியாக கணக்கை சொல்லிட்டு போ’ என்று இளமதியை பிடித்து கேட்டுள்ளதாகவும், அப்போது தந்தையின் கையை இளமதி தட்டிவிட்டு நகர முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளிவில், ஒரு ரீப்பரை எடுத்து மகனைத் தாக்கியிருக்கிறார் தந்தை, பின் அவரிடம் இருந்து அதைப் பிடுங்கிய மகன் தந்தையின் தலையில் அடித்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார். அப்போது மயங்கி விழுந்த சண்முகம் எழாததால், அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்யும்போது, சண்முகம் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து புதுமாப்பிள்ளையும், சண்முகத்தின் மகனுமான இளமதி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.