'நீட்' அனிதாவின் அண்ணன் பரபரப்பு கைது.. பெண்ணிடம் தகராறா? பின்னணி 'காரணம்' என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் பெரியார் நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி பெயர் வசந்தி.

'நீட்' அனிதாவின் அண்ணன் பரபரப்பு கைது.. பெண்ணிடம் தகராறா? பின்னணி 'காரணம்' என்ன?

அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் தான் அருண் குமார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நீட் தேர்வின் பெயரில் உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின் இரண்டாவது அண்ணன் தான் அருண்குமார்.

இந்நிலையில், அருண் குமார், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அந்த பெண்ணின் வீட்டிற்கும், அருண் அடிக்கடி சென்று வந்துள்ளதாக தெரிகிறது. இது பற்றி, அந்த பெண்ணின் பெற்றோரிடம், அவர்களின் உறவினரான வசந்தி என்பவர் தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஆத்திரத்தில் செய்த செயல்

இதன் காரணமாக, வசந்தி மீது, அருண் குமார் கடும் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வசந்தி நின்று கொண்டிருந்த தெருவில், மோட்டார் பைக்கில் வந்த அருண் குமார், அங்குமிங்குமாக மிகவும் வேகமாகவும், தாறு மாறாகவும் வண்டியை ஓட்டியுள்ளார். இதனால், எரிச்சலடைந்த வசந்தி, தனது கணவரிடம் அருண் குமாரின் செயல் பற்றி கூறியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை

தொடர்ந்து, வசந்தியின் கணவர், அருண்குமாரிடம் தட்டிக் கேட்கவும் செய்துள்ளார். அப்போது, வசந்தி மற்றும் அவரது கணவரை, அருண் குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அவர்களிடம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அருண்குமார் தாக்கியதில் காயமடைந்த கணவன் - மனைவி ஆகியோரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் விசாரணை

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, அருண் குமார் மீது போலீசில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார் வசந்தி. பின்னர், இது பற்றி விசாரித்த போலீசார், அருண் குமார் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைதும் செய்துள்ளனர்.

நீட் தேர்வின் பெயரில் உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின் அண்ணன், பெண் வன்கொடுமை சட்டத்தில், கைது செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEET, ANITHA, POLICE, ARIYALUR

மற்ற செய்திகள்