RRR Others USA

ARIIA Ranking: நாட்டிலேயே ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவில் மிகவும் புத்தாக்கம் நிறைந்த கல்வி நிறுவனம் ஆகத் தொடர்ந்து 3-வது முறையாக முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது ஐஐடி மெட்ராஸ்.

ARIIA Ranking: நாட்டிலேயே ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் சார்பில் புத்தாக்க சாதனைகளுக்கான கல்வி நிறுவனங்களில் தரவரிசைப் பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் இந்தத் தர வரிசையில் மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள்/ பல்கலைக்கழகம் என்ற பிரிவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ARIRA Ranking: IIT madras acquired the first position

இந்த ஆண்டு 1,438 உயர் கல்வி நிறுவனங்கள் ARIIA தரவரிசைக்கான பதிப்பில் பங்கேற்றன. இதன் தரவரிசைப் பட்டியல் முடிவுகளை மத்திய கல்வித்துறை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் வெளியிட்டார். ARIRA மூலம் நமது நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களை சர்வதேச தரவரிசைப் பட்டியலுக்கு தயார்படுத்த உதவும்.

ARIRA Ranking: IIT madras acquired the first position

இந்தத் தரவரிசைப் பட்டியலின் நோக்கம் குறித்து சுபாஸ் சர்க்கார் கூறுகையில், “கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர் தர ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றை ஊக்குவிக்க, மறுசீரமைக்க சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்குவதே ARIIA பணி. இந்தத் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 3-வது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது.

ஐஐடி மெட்ராஸ் தனது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே புத்தாக்கங்களுக்கான முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்கிறது. இதன் காரணமாக தொழில்நுட்ப உலகின் சிறந்தோர்களை உருவாக்கும் சூழல் கிடைக்கும்” எனப் பேசினார்.

TOPPER, IIT MADRAS, EDUCATION, ஐஐடி மெட்ராஸ், சென்னை, கல்வி தரவரிசை, ARIIA RANKING

மற்ற செய்திகள்